கஃபே ரேஸர் வகை மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக்கில் புதிய பச்சை வண்ணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக் மாடலில் கூடுதலாக பச்சை வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சிவப்பு , கருப்பு மற்றும் பச்சை என மூன்று வண்ணங்களை பெற்று விளங்குகின்றது. ஆரம்பத்தில் விற்பனையிலிருந்த மஞ்சள் வண்ணம் நீக்கப்பட்டுள்ளது.
29.1 bhp ஆற்றல் மற்றும் டார்க் 44Nm வெளிப்படுத்தும் 535சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ட்வின் டவுன் டீயூப் அடிச்சட்டத்தினை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கான்டினென்டல் ஜிடி மாடலில் முன்பக்கத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் கேஸ் ஏற்றப்பட்ட இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் இரு பிஸ்டன் காலிப்பரை கொண்ட 300மிமீ ஃபிளோட்டிங் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக் இந்திய சந்தையில் பெரிதான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்யாத மாடலாக இருந்து வருகின்றது.