ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் புதிய வண்ணங்கள்

கம்பீரமான ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் 2016ஆம் ஆண்டில் வரவுள்ள புதிய வண்ணங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இவற்றில் எலக்ட்ரா 350 , கிளாசிக் 350 , புல்லட் 500 மற்றும் கிளாசிக் 500 பைக்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

royal-enfield-electra-350

ராயல் என்ஃபீல்ட் எலக்ட்ரா 350

எலக்ட்ரா 350 பைக்கில் விற்பனையில் சிவப்பு , கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்கள் உள்ளது. புதிய வண்ணமாக மெர்டியன் நீலம் மற்றும் மர்சாலா சிவப்பு வண்ணம் சேர்க்கப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

கிளாசிக் 350 பைக்கில் விற்பனையில் நீலம் , சாம்பல் , கருப்பு , சில்வர் மற்றும் மரூன் வண்ணங்கள் உள்ளது. புதிதாக சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் இணைக்கப்பட உள்ளன.

ராயல்-என்ஃபீல்டு-கிளாசிக்-350

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 500

புல்லட் 500 பைக்கில் விற்பனையில் கிளாசிக் நீலம் மற்றும் மரூன் வண்ணங்கள் உள்ளது. புதிய வண்ணங்களாக கிரே மற்றும் பச்சை இணைய உள்ளது. இதே போல கிளாசிக் குரோம் பைக்கிலும் இணைக்கப்படலாம்.

ராயல்-என்ஃபீல்டு-புல்லட்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500

கிளாசிக் 500 பைக்கில் கருப்பு , டேன் மற்றும் சில்வர் வண்ணங்கள் உள்ளது. புதிதாக நீல வண்ணத்திலும் கிளாசிக் ஸ்டார்ம் 500 பைக்கில் உள்ள பாடி கிராஃபிக்ஸ் பெற்றிருக்கும்.

ராயல்-என்ஃபீல்டு-கிளாசிக்-500

ராயல் என்ஃபீல்ட் வண்ணங்கள் படத்தொகுப்பு

imagesource: teambhp