ரோல்ஸ்ராய்ஸ் கார் விற்பனையில் புதிய சாதனை

0
ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டில் அதிக கார்கள் விற்பனை செய்து கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து சாதனை செய்து வருகின்றது.

கடந்த 111  வருட ரோல்ஸ்ராய்ஸ் வரலாற்றில் அதிகப்படியான கார்களை 2014 ஆம் வருடத்தில் 4063 கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் விட 12% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் கார்

அமெரிக்கா ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் அதிகப்படியான கார்களை விற்பனை செய்துள்ளனர். இவற்றை தொடர்ந்து சீனாவிலும் கனிசமான விற்பனையை பதிவு செய்துள்ளது.

Google News

ரோல்ஸ் ராய்ஸ் விற்பனை தொகுப்பு;

rolls royce Sales Record

ரயீத் மற்றும் கோஸ்ட் II மாடல்கள் இந்த வளர்ச்சியில் பெரும்பங்கினை வகித்து வருகின்றது. தற்பொழுது உலக முழுவதும் 127 டீலர்களை கொண்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் மேலும் டீலர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் அறிய ; ரோல்ஸ் ராய்ஸ் கார்

Rolls-Royce deliver 4063 cars in 2014