மஹிந்திரா மோஜோ , பஜாஜ் அவென்ஜர் மற்றும் ஹீரோ டூயட் ஸ்கூட்டர் போன்றவை உறுதி செய்யப்பட்டிருந்தாலும் மேலும் சில மாடல்கள் இந்த மாதம் விற்பனைக்கு வரலாம்.
1. மஹிந்திரா மோஜோ
2. பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 200
3. ஹீரோ டூயட்
ஹீரோ டூயட் ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ எட்ஜ் விற்பனைக்கு வந்தபொழுது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் டூயட் ஸ்கூட்டரில் பல விதமான நவீன ஆப்ஷன்கள் உள்ளது.
ஹீரோ டூயட் அக்டோபர் 13ந் தேதிக்கு பிறகு சந்தைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. இதன் ஆன்ரோடு விலை ரூ.52,000 இருக்கலாம்.
4. ஹோண்டா 125சிசி பைக்
புதிய ஹோண்டா 125சிசி பைக் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வருவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் உறுதியான தகவல் இல்லை
மேலும் சுஸூகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலின் பின்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் , ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் மற்றும் புதிய ஹோண்டா சிபிஆர்250 ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர்150 ஆர் போன்ற பைக்குளும் வரலாம்.