இனி என்ஜினுக்கு துனை நிற்க்கும் முக்கிய அமைப்புகள் பற்றி கற்போம் வாருங்கள்..
மிகுந்த அழுத்தத்துடன் சிலிண்டரில் தெளிக்க ஃபயூல் இன்ஜெக்சன் மிக உதவிகரமாக உள்ளது.
எரிபொருள் எடுத்து செல்லும் அமைப்பு
எரிபொருள் எடுத்து செல்லும் அமைப்பில் உள்ள முக்கிய பாகங்கள்…
Fuel Injection Pump
Fuel Injector
Fuel Filters
Fuel Line
படத்தில் உள்ளது போலதான் எரிபொருள் கலன்யில் இருந்து எரிபொருள் இன்ஜெக்சன் பம்ப் வழியாக உறிஞ்சப்பட்டு ஃபில்டர்யில் சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட எரிபொருள் குழாய் வழியாக இன்ஜெக்டர்க்கு கொண்டு செல்லப்பட்டு அழுத்தத்துடன் என்ஜின் சிலிண்டருக்கு செல்கிறது.
Fuel Injection Pump
Fuel Injection Pump ஆனது எரிபொருள் கலனில் இருந்து உறிஞ்சப்பட்டு மிகுந்த அழுத்தத்துடன் 600-1000 bar வரை அழுத்தம் இருக்கும். அதனை இன்ஜெக்டர்க்கு அனுப்பும்.
Fuel Injection Pump இரண்டு வகை அவை
1. Inline Fuel Injection Pump
ஓவ்வொரு சிலிண்டுருக்கும் தனிப்பட்ட பம்பிங் சேம்பர் இருக்கும்.
2. Rotary Fuel Injection Pump(Distributor pump)
ஓரே பம்பிங் சேம்பர் இருக்கும் ஆனால் தனி தனியாக சிலிண்டருக்கு பிரித்து தரும்.
Fuel Injector
இன்ஜெக்டர் எரிபொருளை மிகுந்த அழுத்தத்துடன் தெளிக்க உதவும்.
Fuel Filters
எரிபொருளினை சுத்தம் செய்யகின்றது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் நீக்கப்படுகிறது.
Fuel Line
எரிபொருளை எடுத்து செல்லும் குழாய் ஆகும்.