வால்வோ சைல்டூ சீட் கான்செப்ட்

0
வால்வோ நிறுவனம் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்வதில் முன்னோடியாக விளங்குகின்றது. வால்வோ எக்ஸ்லன்ஸ் சைல்டு சீட் என்ற பெயரில் சொகுசு மற்றும் பாதுகாப்பினை வழங்கும் இருக்கை கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

வால்வோ சைல்டூ சீட்
Volvo Excellence Child seat 

சைல்டூ சீட் எனப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கையின் முக்கியத்துவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இந்த பாதுகாப்பு இருக்கைகளின் முக்கிய பங்கு பிறந்த குழந்தைகள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் காரில் பயணித்தால் சைல்டூ சீட்டில் மட்டுமே பயணிக்க வேண்டும்.

வால்வோ அறிமுகபடுத்தி உள்ள சொகுசு சைல்டூ சீட்டின் பெயர்  எக்ஸ்லன்ஸ் சைல்டு சீட் என அழைக்கின்றது. இந்த பாதுகாப்பு இருக்கை ஓட்டுநருக்கு பக்கத்தில் உள்ள பயணியர் இருக்கைக்கு பதிலாக மிகவும் பாதுகாப்பான இடத்தில் சைல்டூ சீட் பொருத்தியுள்ளனர். மேலும் குழந்தை ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர்களின் கண்காணிப்பில் குழந்தை இருக்கும்.

Google News

மூன்று விதமான முக்கிய காரணிகளை கொண்டு இந்த இருக்கை வால்வோ வடிவமைத்துள்ளது.

1. குழந்தைகளை வெளியே கொண்டு வருவது மற்றும் சைல்டூ இருக்கையில் அமரவைப்பது மிக சுலபமாக இருக்கும்.

2. சொகுசு தன்மை கொண்ட இந்த இருக்கை ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் பயணிப்பவர்களின் கண்காணிப்பில் இருக்கும்.

3. குழந்தைகளுக்கு சிறப்பான இடவசதி மற்றும் முக்கியமான உடல் பாகங்கள் விபத்தின் பொழுது எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வால்வோ சைல்டூ சீட்
Volvo Excellence Child seat 

வால்வோ XC90 எஸ்யுவி காரில் இந்த இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கை மூன்று அல்லது நான்கு வயது வரை பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் சைல்டூ சீட் கட்டாயம்

வால்வோ சைல்டூ சீட் வீடியோ

  
Volvo Excellence Child seat concept reveals