சுவீடன் நாட்டைச் சார்ந்த வால்வோ நிறுவனம் இந்தியாவில் கனரகவாகனங்கள் பேருந்துகளை உற்பத்தி செய்து விற்று வருகிறது. கார்களை இறக்குமதி செய்து விற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் 4 கார்களை விற்பனையில் உள்ளன. அவை வால்வோ VS80, வோல்வா VS60,(seadens) மற்றும் எஸ்யுவி வகையில் வோல்வா XC80, வோல்வா XC80. இந்த கார்களின் விலை 25லட்சம் முதல் 55 லட்சம் வரை ஆகும்.
பாரிஸ் மோட்டார் ஷோ 2012யில் அறிமுகம் செய்யப்பட்ட வோல்வா V40 இந்தியாவில் வருகிற மார்ச் 2013யில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என வோல்வா அறிவித்துள்ளது. விலை வழக்கம் போல அதிகம்தான்.இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100% வரி என்பதனை அறிவீர்கள் என நினைக்கிறேன்.
உலக அளவில் மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் என்றால் அது வோல்வா மட்டும்தான்.
விலை: 25 லட்சம் இருக்கலாம்
வோல்வா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் டாமஸ் எர்ன்பர்க்(TOMAS Ernburg) ] PTI பேட்டி
வால்வோ இந்தியா சொகுசு கார் விற்பனையில் இந்தியாவில் முதன்மையான(NO.1) இடத்திற்க்கு இலக்கு வைத்து முன்னேறி வருகிறது. வோல்வா இந்தியாவின் கடந்த வருட விற்பனை இந்தியாவில் 1% மட்டுமே. ஆனால் இந்த வருடம் 3% ஆகும். இதனை 2020 ஆம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
உலக அளவில் கார் உற்பத்தியில் வால்வோ நிறுவனம் வருடத்திற்க்கு 400,000 கார்கள் என்ற தன் உற்பத்தியை வருடத்திற்க்கு 800,000 ஆக உயர்த்த உள்ளதாம். இதனால் தன் உற்பத்தி ஆலையினை 40யாக 2020க்குள் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
தற்பொழுது வால்வோ நிறுவனத்திற்க்கு 12 உற்பத்தி ஆலைகள் உள்ளன.அடுத்த ஆண்டு சீனாவில் தன் ஆலையை தொடங்க உள்ளனர். இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.