வால்வோ வி40 மற்றும் எக்ஸ்சி90 எஸ்யூவி இந்தியா வருகை

0
வால்வோ வி40 பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் எகஸ்சி90 சொகுசு எஸ்யூவி செடான் கார்களை இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

வால்வோ எக்சி90 எஸ்யூவி
வால்வோ எக்சி90 எஸ்யூவி

இந்திய வால்வோ பிரிவு வி40 கிராஸ் கன்டரி , எக்ஸ்சி90 எஸ்யூவி , எஸ்60 , எஸ்80 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. புதிய தலைமுறை எக்சி90 எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது.

வால்வோ வி40

வி40 காரில் டி3 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 152பிஎஸ் ஆகும். முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வருவதனால் விலை ரூ. 25 முதல் 30 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

Google News
வால்வோ வி40 கார்
வால்வோ இன்டிரியர்

வால்வோ வி40 காரானது மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 1 சீரீஸ் காருக்கு கடுமையான சவாலினை தரும்.

வால்வோ எக்சி90 எஸ்யூவி

வால்வோ எக்சி90 எஸ்யூவி பல நவீன வசதிகளை கொண்ட மிகவும் நேர்த்தியான தோற்றத்தினை பெற்றுள்ள சொகுசு எஸ்யூவி காராகும். 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வருகின்றது.
வால்வோ எக்சி90 எஸ்யூவி
புதிய தலைமுறை எக்சி90 எஸ்யூவி கார் வரும் செப்டம்பர் மாதம் வருவது உறுதியாகியுள்ளது. மேலும் தற்பொழுது முன்பதிவு தொடங்கியுள்ளது. மும்பையில் புதிய டீலரை வால்வோ நேற்று தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க
வால்வோ வி40 கிராஸ் கன்ட்ரி விலை விபரம்