Automobile Tamilan

விடைபெறும் விக்டோரி மோட்டார் சைக்கிள்ஸ்

போலாரீஸ் குழுமத்தின் அங்கமான விக்டோரி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் இருந்து விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரி பிரசத்தி பெற்ற க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

விக்டோரி பைக்

அமெரிக்காவின் பிரசத்தி பெற்ற க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் நிறுவனமான விக்டோரி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 18 ஆண்டுகால வரலாற்றை கொண்ட நிறுவனமாகும். இந்த 18 ஆண்டுகளில் 60க்கு மேற்பட்ட மாடல்களை அறிமுகம் செய்து பல்வேறுநாடுகளில் விற்பனையில் உள்ள விக்டோரி பைக்குகள் இந்தியா சந்தையிலும் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது உற்பத்தியை முழுதாக நிறுத்துவதாக போலாரீஸ் அறிவித்துள்ளது.

போலாரீஸ் குழுமத்தின் மற்றொரு பிராண்டான இந்தியன் மோட்டார்சைக்கிள் கரூஸர் ரகத்தில் அமோக ஆதரவினை பெற்று விளங்குவதனாலும்  , கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனையில் சரிவை நோக்கி பயணித்து வரும் இந்த பிராண்டு கடந்த ஆண்டில் சர்வதேசளவில் 10,000 பைக்குகளை கூட விற்பனை செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலரீஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் சிஇஓ ஸ்காட் வைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 18 ஆண்டுகளாக எங்களது மூதலீடு மட்டுமல்லாமல் இதயம் மற்றும் ஆன்மா கொண்டு உருவாக்கப்பட்ட விக்டோரி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை நீக்கவதற்கு உண்டான மிக கடினமான முடிவினை நானும் , எனது குழுவும் மற்றும் போலரீஸ் இயக்குனர்கள் வாரியமும் இணைந்து எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் விடை பெற்றாலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு விக்டோரி பைக்குகளுக்கு உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் மேலும் வாரண்டி போன்றவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்டோரி பிராண்டு வளங்களை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கும் , எதிர்வரும் காலங்களில் விக்டோரி விற்பனை மையங்களை இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version