விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ விலை உயர்வு

0

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் மாருதி பலேனோ இரு கார்களுடன் மேலும் சில மாருதி சுசூகி கார்களும் ரூ.1000 முதல் ரூ.20000 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு ஆகஸ்ட் 1ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

maruti-vitara-brezza

Google News

பிரசத்தி பெற்ற மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 1 லட்சம் முன்பதிவுகளை கடந்துள்ள நிலையில் விட்டாரா பிரெஸ்ஸா காரின் விலை ரூ.20,000 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதந்திர விற்பனையில் 10,000 வாகனங்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

தற்பொழுதைய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விலை ரூ . 7.19 லட்சம் முதல் ரூ. 9.88 லட்சம் (முந்தைய விலை ரூ. 6.99 லட்சம் முதல் 9.68 லட்சம் ) ஆகும்.

கேள்வி பதில் பக்கம் ஆட்டோமொபைல் டாக்கீஸ்

மற்றொரு மாடலான மாருதி பலேனோ ஹேட்ச்பேக் காரின் விலை மூன்றாவது முறையாக ரூ. 10,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தற்பொழுதைய பலேனோ கார் விலை ரூ . 5.25 லட்சம் முதல் ரூ. 8.36 லட்சம் (முந்தைய விலை ரூ. 5.15 லட்சம் முதல் 8.33 லட்சம் ) ஆகும்.

maruti-suzuki-baleno-rs

கடந்த ஜூன் 2016யில் வரை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 27,261 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. பலேனோ கார் ஜூன் 2016 வரை 71,230 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாருதி மாதந்திர விற்பனையில் புதிய மைல்கல்லாக ஜூலை 2016யில் 1,25,778 கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு 11,338 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மாருதி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா இரு மாடல்களின் காத்திருப்பு காலம் 6 மாதம் முதல் 9 மாதங்கள் வரை உள்ளது.