Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

உயிரை குடிக்கும் வேகத்தடை ஆபத்தான மரண சாலைகள்..!

by automobiletamilan
ஜூன் 19, 2017
in செய்திகள்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 30 விபத்துகள் வேகத்தடை வாயிலாக ஏற்படுவதுடன் சராசரியாக ஒருநாளைக்கு 9 நபர்கள் இறப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஆபத்தான வேகத்தடை

வேகத்தை குறைப்பதற்காக மற்றும் விபத்தை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஸ்பீடுபிரேக் எனப்படும் வேகத்தடையால் தினசரி 30 விபத்துகள் நாடு முழுவதும் ஏற்படுவதுடன்,இதனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 உயிர்கள் பறிக்கப்படுகின்றன என அதிர்ச்சி தகவலை அமைச்சர் நிதின் 5rகட்காரி தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் மரணமைடைபவர்களில் வேகத்தடை குறித்தும் கணக்கு எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் 2014 ஆம் ஆண்டின் வேகத்தடை மரணம் குறித்தான விபரங்களை வெளியிடவில்லை, ஆனால் 2015 ஆம் ஆண்டிற்கான விபரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளால் மரணமடைந்தவர்களின்  மொத்த எண்ணிக்கையே 2937 மரணங்கள் மட்டுமே..! ஆனால் இந்தியாவில் உள்ள வேகத்தடையால் 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3409 ஆகும். அதே ஆண்டில் மொத்தமாக நாடு முழுவதும் நடந்த விபத்துகளால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.47 லட்சம் ஆகும்.

பாதுகாப்பு மற்றும் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய வேகத்தடைகள் மரண மேடுகளாக மாறுவதற்கு காரணமே முறையான உயரத்தில் வேகத்தடை இல்லாததும் மற்றும் அதற்கு உண்டான எச்சரிக்கை பலகைகளை எங்கேயும் தெளிவாக பயன்படுத்த தவறுவதே முக்கிய காரணமாகும்.

வேகத்தடை உயரம் என அதிகரிக்கப்பட்டது என்றால் முட்டள்தனமாக வாகன ஓட்டிகளின் வேகமே முக்கிய காரணமாக பொதுவாக தெருக்கள் மற்றும் நகர்புற சாலைகள் நெடுஞ்சாலையுடன் இணையும் இடங்களிலே பயன்படுத்தப்படுகின்றது. இவற்றின் உயரம் சீராக பராமரித்தால் அந்த வேகத்தடை வாகன ஓட்டிகளுக்கு பெரிய சவாலாக இல்லாமலே வேகத்தை குறைக்காமாலே வாகனத்தை இயக்குவதே முக்கிய காரணம், இதன் காரணமாக அதிகபட்சமாக விபத்துகள் நிகழ்வதை அறிந்த நெடுஞ்சாலை துறை மேலும் வேகத்தடை உயரத்தை உயர்த்தியதே இந்த உயிர் பலிகளுக்கு காரணமாக அமைந்து வருகின்றது.

வேகத்தடை விதிமுறைகள்
  • குறைந்தது 40 மீட்டருக்கு முன்பாக வேகத்தடை என்ற எச்சரிக்கை பலகை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • 17 மீட்டர் ஆரம் பெற்றதாகவும், 3.7 மீட்டர் அகலத்துடன் அதிகபட்சமாக 10 செ.மீ உயரம் மட்டுமே இருப்பது அவசியமாகும்.
  • பிரதிபலிக்கும் வகையிலான வண்ணம் பெற்ற பெயின்டை வேகத்தடை மேடுகளில் பயன்படுத்திருக்க வேண்டும்.
  • 10 மீட்டர் தொலைவிற்குள் இரு வேகத்தடைகளை ஏற்படுத்தக் கூடாது.

வேகத்தை பராமரியுங்கள் விபத்து இல்லாத பயணத்தை கடைபிடியுங்கள்..!

Previous Post

ரெனால்ட் வழங்கும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்

Next Post

பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 20.6.2017

Next Post

பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 20.6.2017

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version