ஸ்கேனியா – கவர் ஸ்டோரி

0
வணக்கம் தமிழ் உறவுகளே…

இந்திய சாலைகளில் வாகனங்களின் எண்ணிகை நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது.அதைவிட வாகனங்களின் அழகான வடிவமைப்பு வசிகரித்து அதன் செயல்திறன் நம்மை வியக்க வைக்கிறது.

எதிர்பார்த்தது போல ஸ்கேனியா(scania) நிறுவனம் தன் வாகனத்தை களமிறக்கியுள்ளது. ஸ்கேனியா நிறுவனம் வோக்ஸ்வேகனை(volkswagen) தலைமையில் இயங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பே வெளிவரவேன்டிய ஸ்கேனியா சில நிர்வாக காரணங்களால் காலதமாதமாக களம் கண்டுள்ளது.

Google News
scania logo

2007 ஆம் ஆண்டு முதல் ஸ்கேனியா நிறுவனம் லாரசன்-டர்போ நிறுவனத்துடன் இனைந்து இந்தியாவில் தன் சேவையை தொடங்கியது.இதுவரை இந்த நிறுவனம் குவாரிகளுக்கான ட்ரக்களை விற்றுள்ளது. ஸ்கேனியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை பெங்களூரு நரசாபுர  தொழிற்சாலை பகுதியில் செயல்படுகிறது.

உலகின் மிகச் சிறந்த ட்ரக்(லாரி) நிறுவனமும் ஒன்று.ஸ்கேனியா முதல்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள லாரிகள் R 500 6×4, G 460 6×4,  P410 6×2 மற்றும் P 360 4×2.

scania trucks1. SCANIA R 500 6×4

ஸ்கேனியா R 500 6×4 லாரி மிகச் சிறப்பான இழுவை திறன் கொண்ட வாகனம் ஆகும். இதனை சாலைகளின் அரசன்(king of the road) என்றே அழைக்கின்றனர். V8  என்ஜின் பொருத்தப்பட்டள்ள இந்த வாகனத்தின் குதிரைதிறன் 500bhp ஆகும். மேலும் வேகத்திற்க்கு தகுந்தாற்போல தன் முறுக்கு(torque) விசையை மாற்றிக் கொள்ளும். R 500 6×4 லாரி கார்கோ நிறுவனங்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறும்.

2. SCANIA G 460 6×4

ஸ்கேனியா R 460 6×4 லாரி இதுவும் மிகச் சிறப்பான இழுவை திறன் கொண்ட வாகனம் ஆகும்.இந்த வாகனத்தின் குதிரைதிறன் 460bhp ஆகும். இந்த லாரி மிகச் சிறப்பான முறுக்கு(torque) விசை கொண்டதாகும்.

3. SCANIA P 410 6×2
ஸ்கேனியா R 410 6×2 லாரி  மிகச் சிறப்பான  திறன் கொண்ட வாகனம் ஆகும். இந்த வாகனம் பல பயனபாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தின் குதிரைதிறன் 410bhp ஆகும்.


scania4. SCANIA P 360 4×2
ஸ்கேனியா R 460 4×2 லாரி இதுவும் மிகச் சிறப்பான இழுவை திறன் கொண்ட வாகனம் ஆகும்.இந்த வாகனத்தின் குதிரைதிறன் 360bhp ஆகும்.

இந்தியா முழுமைக்கு லாரசன்-டர்போ நிறுவனத்தை தன் டீலராக நியமித்துள்ளது.