ஸ்பைக்கர் சொகுசு கார் இந்தியா வருகை

0
நெதர்லாந்து நாட்டின் ஸ்பைக்கர் சொகுசு கார் நிறுவனம் 2013 இறுதிக்குள் இந்தியாவில் தன்னுடைய கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே டெல்லியில் இறக்குமதியாளர் மற்றும் டீலரை நியமித்துள்ளது.

ஸ்பைக்கர் நிறுவனம் பார்முலா-1 பந்தயங்களில் 2007 ஆம் ஆண்டு பங்கேற்றது. இந்த அணிதான் தற்பொழுது விஜ்ய மல்லையாவின் கீழ் செயல்படும் சஹாரா ஃபோர்ஸ் இந்தியா ஆகும்.

Spyker Venator

ஸ்பைக்கர் நிறுவனம் இரண்டு விதமான கார்களை விற்பனை செய்து வருகின்றது. அவை சி8 அலிரான் மற்றும் பி6 வெனேட்டர் ஆகும்.

சி8 அலிரான் காரில் ஆடி நிறுவனத்தின் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 400பிஎஸ் மற்றும் டார்க் 480என்எம் ஆகும்.

பி6 வெனேட்டர் காரில் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் ஆற்றல் 380பிஎஸ் ஆகும்.

ஸ்பைக்கர் கார்களின் விலை ரூ.2 கோடியை தாண்டும்.