சக்திவாய்ந்த ஹீரோ இம்பல்ஸ் வருகின்றதா ?

0

ஆஃப் ரோடு அம்சங்களை கொண்ட ஹீரோ இம்பல்ஸ் மோட்டார்சைக்கிள் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் செயல்திறன் மிக்க மாடலாக வர வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

hero-impulse

Google News

13.2 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 149.2 சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இம்பல்ஸ் தோல்வியை தழுவியது.

150சிசி முதல் 250சிசி வரையிலான பிரிவில் சிறப்பான பங்களிப்பினை வழங்கும் நோக்கில் மிக தீவரமான திட்டங்களை ஹீரோ மோட்டோகார்ப் செயல்படுத்தி வருகின்றது. அடுத்த வருடத்தின் தொடக்கம் முதல் சூப்பர் பைக்குகளை களமிறக்க உள்ளது.

முதற்கட்டமாக எக்ஸ்டீரிம் 200எஸ் , ஹெச்எக்ஸ் 250 போன்ற மாடல்களுடன் இம்பல்ஸ் 200 மாடலும் இணைய வாயுப்புள்ளது. இம்பல்ஸ் 200 அல்லது இம்பல்ஸ் 250 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த பைக்கில் 31 bhp ஆற்றலை வழங்கும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடலும் வரலாம். FI என்ஜினுடன் கம்பைன்ட் ஏபிஎஸ் பெற்றிருக்கும்.

மேலும் படிக்க ; ஹீரோ மோட்டோகாரப் அதிரடி திட்டம் என்ன ?

ஹீரோ இம்பல்ஸ் என்ற பெயரிலோ அல்லது மாற்று பெயரிலோ இந்த மோட்டார்சைக்கிள் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.