கடந்த 2014ம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ டேர் ஸ்கூட்டர் வருகின்ற செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக டேர் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஹீரோ டேர்
125சிசி சந்தையில் சிறந்து விளங்கும் ஆக்டிவா 125 மற்றும் சுசூகி ஆக்செஸ் 125 என இரு மாடல்களுக்கும் சவலாக விளங்கும் வகையில் விற்பனைக்கு வரவுள்ள டேர் ஸ்கூட்டரில் 125சிசி என்ஜின்பொருத்தப்பட்டு 9.38 hp பவர் மற்றும் 9.8 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் முன்புறத்தில் 200மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.
டேர் ஸ்கூட்டரில் பல்வேறு வசதிகளை பெற்றதாக விளங்குகின்ற மாடலில் அலாய் வீல் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் ,டிஸ்க் பிரேக் போன்றவை இருக்கும். இதுதவிர எல்இடி டெயில் விளக்கு , டிஜிட்டல் கிளஸ்ட்டர் , மொபைல் சார்ஜிங் போர்ட் , ட்யூப்லெஸ் டயர் ,சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
வருகின்ற 2017-2018 ஆம் நிதி வருடத்தில் முதல் அல்லது இரண்டாம் காலண்டில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்டீரிம் 200எஸ் மற்றும் ஹெச்எக்ஸ் 250ஆர் மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.