ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஆப்பரிக்கா கண்டத்தில் முதன்முறையாக விற்பனையை தொடங்கியுள்ளது. கென்யாவில் அசெம்பிளிங் ஆலையை திறந்துள்ளது. முதற்கட்டமாக ஸ்பிளென்டர் புரோ, ஹங்க், கிளாமர், மற்றும் கரீஸ்மா போன்ற பைக்களை களமிறக்கியுள்ளது.
கென்யாவை சேர்ந்த சமீர் குரூப் நிறுவனத்தினை தனது ஆஸ்தான டிஸ்டீபூட்டராக நியமித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ திரு பவன் முஞ்சால் இது பற்றி கூறுகையில்
ஆப்பரிக்கா கண்டத்தில் முதன்முறையாக கென்யாவில் தொடங்கியுள்ளோம். மிக பெரிய வரவேற்பினை ஹீரோ பெறும் என நம்புகிறோம். முதற்கட்டமாக இங்கு அசெம்பிளிங் மட்டுமே செய்து விற்பனை செய்யப்படும்.
கடந்த மே மாதத்தில் மத்திய அமெரிக்காவில் விற்பனையை தொடங்கியது. தற்பொழுது ஆப்பரிக்கா மேலும் அடுத்த வாரத்தில் ஐவரி கோஸ்ட் பகுதியில் விற்பனையை ஹீரோ தொடங்கும்.