ஹீரோ HX 250R ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில்

0
ஹீரோ பைக் நிறுவனத்தின்  HX 250R ஸ்போர்ட்ஸ் பைக்கினை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர  ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.
ஹீரோ HX 250R ஸ்போர்ட்ஸ் பைக்

 HX 250R  பைக் மிகவும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய பைக்காகவும் ஸ்போர்டிவ் தோற்றுத்துடனும் விளங்கும் வகையில் ஹீரோ மற்றும் எரிக் புயர் ரேசிங் நிறுவனத்தின் கூட்டணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

31பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த புதிய 250சிசி என்ஜினை எரிக் புயல் ரேசிங் நிறுவனத்தின் துனையுடன் ஹீரோ மோட்டோகார்ப் வடிவமைத்துள்ளது. இதன் முறுக்குவிசை 26என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

எச்எக்ஸ் 250ஆர் பைக்கில் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோசாக் அப்சர்பர் பொருத்தப்பட்டிருக்கும். கம்பைன்டு பிரேக்கிங் அமைப்பு மற்றும் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனல் வேரியன்டிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HX 250R ஸ்போர்ட்ஸ் பைக் முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவுள்ளதால் இளைய தலைமுறையினர் மிக எளிதாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எச்எக்ஸ் 250ஆர் பைக் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கிற்க்கு நேரடியான போட்டியாக விளங்கும். மேலும் யமஹா ஆர்25 , கேடிஎம் ஆர்சி200 போன்ற பைக்களுக்கும் சவாலினை தரவல்லதாகும்.

ஹீரோ HX 250R ஸ்போர்ட்ஸ் பைக் விலை 1.30 லட்சம் முதல் 1.50 லட்சத்திற்க்குள் இருக்கும்.