கடந்த 2016 ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சி அரங்கில் கவனத்தை ஈர்த்த மாடல்களில் ஒன்றான ஹீரோ XF3R பைக் உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஹீரோ XF3R மாடல் கான்செப்ட் குறித்து வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் இந்த மாடலுக்கான வடிவத்தை காப்புரிமை கோரி ஹீரோ மோட்டோகார்ப் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
முதன்முறையாக காட்சிக்கு வந்த எக்ஸ்எஃப்3ஆர் கான்செப்ட் மாடலில் 300 முதல் 350சிசி க்கு இடையிலான எஞ்சின் பொருத்தப்பட்ட 40 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மாடலாகவும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்று ஏபிஎஸ் வசதி ஆப்ஷனலாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
patent image source- gaadiwaadi
ஹீரோ XF3R வருகை
2014 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான ஹீரோ HX250 மாடல் உள்பட எக்ஸ்டீரிம் 200 எஸ், ஹேஸ்டர் போன்ற பெரும்பாலான பெர்ஃபாமென்ஸ்ரக மாடல்கள் இன்னும் அறிமுகம் செய்யப்படாமல் உள்ள நிலையில் எக்ஸ்எஃப்3ஆர் பைக்கிற்கும் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளதால் அடுத்த சில மாதங்களில் ஹீரோ எக்ஸ்டீரிம்200 எஸ் வரலாம்.
அதனை தொடர்ந்தே 30ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்த உள்ள 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஹீரோ HX250 இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களிலோ வரலாம்.
அதன் பிறகே அதாவது 2018 ஆம் ஆண்டில் ஹீரோ XF3R மாடல் விற்பனைக்கு களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
சமீபத்தில் அர்ஜென்டினாவில் முதன்முறையாக புதிய ஹீரோ கிளாமர் 125 பைக் மாடலை சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளதை நாம் முன்பே தெரிவித்திருந்தோம். எனவே அடுத்த சில வாரங்களில் புதிய ஹீரோ கிளாமர் விற்பனைக்கு வரவுள்ளது.