ஹூண்டாய் எம்பிவி வருமா ?

0
க்ரெட்டா எஸ்யுவி காரை தொடர்ந்து ஹூண்டாய் எம்பிவி சந்தையில் களமிறங்க தயாராகி வருகின்றது. ஹேக்ஸா ஸ்பேஸ் என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போ 2012ம் ஆண்டில் காட்சிக்கு வைத்தது.

ஹூண்டாய் எம்பிவி
வரும் 2016ம் ஆண்டின் இறுதிக்குள் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த எம்பிவி மொபிலியோ, எர்டிகா , லாட்ஜி போன்ற எம்பிவி ரக கார்களுக்கு சவாலினை தரும்.
வரவிருக்கும் புதிய எம்பிவி மிக குறைவான விலை கொண்டதாகவும் கிராண்ட் ஐ10 காரிலிருந்து பெரும்பாலான பாகங்களை கொண்டிருக்கலாம் என தெரிகின்றது. மேலும் என்ஜின் ஆப்ஷன் வெர்னா காரில் உள்ளது போல இருக்கும்.
இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும். அடுத்த வருடத்தின் மத்தியில் இந்த எம்பிவி வரலாம்.
Hyundai India to Launch new  MPV next year