புதிய ஹூண்டாய் எலன்ட்ரா கார் விரைவில்

0

வருகின்ற செப்டம்பர் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் எலன்ட்ரா கார் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய எலன்ட்ரா கார் முந்தைய மாடலை விட கூடுதலான தோற்ற மாற்றங்கள் மற்றும் வசதியை பெற்று விளங்குகின்றது.

2017-hyundai-elantra

Google News

எக்ஸ்கூட்டிவ் செடான் ரகத்தில் விற்பனையில் உள்ள எலன்ட்ரா காருக்கு போட்டியாக கரோல்லா அல்டிஸ் , ஜெட்டா ,ஆக்டாவியா , க்ரூஸ் மற்றும் சிவிக் போன்ற கார்கள் கடுமையான சவாலினை ஏற்படுத்தும் கார்களாக அமைந்துள்ளது.

ஹூண்டாய் பூளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவத்தை பெற்றுள்ள எலன்ட்ரா கார் முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலும் வடிவத்தில் மேம்பட்டு ஹூண்டாய் நிறுவனத்தின் அறுங்கோண வடிவ கிரிலில் உள்ள க்ரோம் ஸ்லாட்க்கு மத்தியில் அமைந்துள்ள ஹூண்டாய் லோகோ பெற்றுள்ளது. பக்கவாட்டிலும் டிசைன் மாற்றங்கள் , புதிய அலாய் வீல் டிசைன் போன்றவற்றை கொண்டுள்ளது. இன்டிரியரில் தொடுதிரை அமைப்பு , மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு ,தாரளமான இடவசதி போன்றவற்றை பெற்ற மாடலாக விளங்கும்.

இந்தியாவின் எலன்ட்ரா காரில் 149 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 136 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இவற்றில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.  மேலும்  கூடுதலாக சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனும் இடம்பெறலாம்.

சர்வதேச அளவில் 2015 ஆம் வருடத்தின் இறுதியில் வெளியான புதிய ஹூண்டாய் எலன்ட்ரா கார் இந்திய சந்தைக்கு செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும்.