ஹூண்டாய் எலைட் i20 விற்பனையில் சாதனை

ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனைக்கு வந்த 11 மாதங்களில் 1 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.  கடந்த ஆகஸ்ட் 2014யில் விற்பனைக்கு வந்த எலைட் i20 மாதம் 10,000 கார்களுக்கு மேல் விற்பனை ஆகின்றது.

ஹூண்டாய் எலைட் i20

பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் கப்பா என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 83பிஎஸ் தரும். 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் 90பிஎஸ் ஆற்றலை தரும்.

பிரிமியம் ஹேட்ச்பேக் காரான எலைட் ஐ20 மிக நேர்த்தியான ஃபூளூடியக் வடிவத்தால் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

ஹூண்டாய் எலைட் ஐ20 விலை விபரம் (ex-showroom Chennai)

எலைட் i20 பெட்ரோல் மாடல் ரூ.5.40 லட்சத்தில் தொடங்கி ரூ.7.06 லட்சம் வரை

எலைட் i20 டீசல் மாடல் ரூ.6.54 லட்சத்தில் தொடங்கி ரூ.8.21 லட்சம் வரை ஆகும்

 Hyundai Elite i20 Achieves 1 lac milestone in 11 months