Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிறப்பு எடிசன் அறிமுகம் – updated

by automobiletamilan
மே 25, 2016
in கார் செய்திகள், செய்திகள்

ஹூண்டாய் நிறுவனத்தின் 20வது ஆண்டு கொண்டாட்டத்தினை முன்னிட்டு ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் சிறப்பு பதிப்பினை ரூ.6.05 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. எக்ஸ்சென்ட் காரிலும் சிறப்பு எடிசன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

Hyundai-Grand-i10-Special-Edition

ஸ்போர்ட்ஸ்  நடுத்தர வேரியண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் சிறப்பு பதிப்பு கிடைக்கும்.  82 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா 2 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 114Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

70 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.1 லிட்டர் U2 VGT டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 163Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

20வது வருட கொண்டாடத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிராண்ட் i10 சிறப்பு பதிப்பில் பக்கவாட்டில் பாடி ஸ்டிக்கரிங் , பி பில்லரில் கருப்பு வண்ணம் , பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள ரியர் ஸ்பாய்லரில் பிரேக் லைட் இணைப்பு மற்றும் 20வது வருட ஆனிவர்சரி பேட்ஜ் போன்றவற்றை பெற்றுள்ளது.

Hyundai-Grand-i10-Special-Edition-Rear

உட்புறத்தில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில் அமைந்துள்ளது. மேலும் 6.2 இஞ்ச் அகலம் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றுள்ளது.

மேலும் படிங்க ; ஹூண்டாய் எக்ஸ்சென்ட் சிறப்பு எடிசன் அறிமுகம்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிறப்பு எடிசன்

  1. Hyundai Grand i10 Special Edition Petrol Solid color – ரூ 568,806
  2. Hyundai Grand i10 Special Edition Petrol Metallic color – ரூ 572,289
  3. Hyundai Grand i10 Special Edition Diesel Solid color – ரூ 660,062
  4. Hyundai Grand i10 Special Edition Diesel Metallic color – ரூ 663,793

{ எக்ஸ்ஷொரூம் டெல்லி }

சிறப்பு பதிப்பில் கூடுதலாக பெட்ரோல் காருக்கு ரூ. 55,000 சலுகை மற்றும் டீசல் மாடலுக்கு ரூ.66,000 வரை சலுகை பெற இயலும்.

Tags: Hyundaiகிராண்ட் ஐ10
Previous Post

2016 ஹோண்டா ஆக்டிவா-ஐ விற்பனைக்கு வந்தது

Next Post

ஃபோக்ஸ்வேகன் அமியோ உற்பத்தி ஆரம்பம்

Next Post

ஃபோக்ஸ்வேகன் அமியோ உற்பத்தி ஆரம்பம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version