இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் குளிர்காலத்தை ஓட்டி டிசம்பர் 15 முதல் 20ந் தேதி வரை அனைத்து ஹூண்டாய் டீலர்கள் வாயிலாக சிறப்பு சலுகைகளுடன் நடைபெற்று வருகின்றது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து டீலர்கள் வாயிலாக குளிர்கால கேம்பை ஓட்டி 23 சர்வீஸ் பாயின்ட் செக்கப் , இலவச கார் டாப் வாஷ் , லேபர் கட்டணம் மற்றும் பார்ட்ஸ்களில் விலை சலுகை , நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரோட்சைடு அசிஸ்ட்ன்ஸ் பெறும்பொழுது 20 சதவீத விலை சலுகையை பெறலாம். இதுதவிர டயர் போன்றவை வாங்கும்பொழுது நிச்சிய பரிசுகளை வெல்லாம்.
குளிர்கால கேம்ப் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹூண்டாய் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு – மூத்த துணை தலைவர் திரு ராகேஷ் கூறுகையில் பிரச்சனைகள் வருவதற்கு முன்னதாக சிறப்பான முறையால் வாகனத்தை பராமரிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கேம்ப் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் , சலுகைகள் பெற வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 466 டீலர்கள் மற்றும் 1159 சர்வீஸ் சென்டர்களை கொண்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கின்றது. மேலும் விபரங்கள் உங்கள் அருகாமையில் உள்ள டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.