ஹூண்டாய் க்ரெட்டா காரின் விலை உயர்வு

0
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரின் அமோகமான வரவேற்பினை தொடர்ந்து தற்பொழுது ஹூண்டாய்  க்ரெட்டா காரின் விலை ரூ.20000 வரை உயர்ந்துள்ளது. ஹூண்டாய்  க்ரெட்டா காரின் காத்திருப்பு காலம் 6 மாதங்களாகும்.

ஹூண்டாய் க்ரெட்டா

மிகவும் சிறப்பான மாடலாக விற்பனைக்கு வந்துள்ள க்ரெட்டா எஸ்யூவி காரின் விற்பனை அமோகமாக நடந்து வரும் நிலையில் விலையை ஹூண்டாய் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் , 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் என மூன்று விதமான வேரியண்டில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரின் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு 6 மாதங்கள வரை காத்திருக்க வேண்டி உள்ளது.

Google News

ஹூண்டாய்  க்ரெட்டா பெட்ரோல் மற்றும் டீசல் 1.4 லிட்டர் மாடல்களுக்கு ரூ.10000 மற்றும் 1.6 லிட்டர் மாடல்களுக்கு ரூ.20000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ; ஹூண்டாய் க்ரெட்டா முழுவிபரம்

ஹூண்டாய் க்ரெட்டா புதிய விலை

க்ரெட்டா பெட்ரோல்

1.6 Base: ரூ. 8.84 லட்சம்
1.6 SX: ரூ.9.84 லட்சம்
1.6 SX+: ரூ.11.49 லட்சம்

க்ரெட்டா 1.4 டீசல்

1.4 Base: ரூ. 9.73 லட்சம்
1.4 S: ரூ. 10.70 லட்சம்
1.4 S+: ரூ.11.75 லட்சம்

க்ரெட்டா 1.6 டீசல்

1.6 SX: ரூ 12 லட்சம்
1.6 SX+: ரூ.13 லட்சம்
1.6 SX (O): ரூ 14.04 லட்சம்

க்ரெட்டா 1.6 டீசல் ஆட்டோமேட்டிக்

 1.6 SX+ Auto: ரூ. 14.02 லட்சம்

{எக்ஸ்ஷோரூம் சென்னை}

Hyundai Creta SUV prices hiked