ஓடிசா மாநிலம் கட்டாக்கில் வரும் ஜனவரி 1. 2016 முதல் ஹெல்மெட் இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் இல்லை என உத்தரவிட்டுள்ளது. ஓடிசாவின் பார்கார் மற்றும் சம்பல்பூர் மாடவட்டங்களில் இந்த நடைமுறை செப் 1 , 2015 முதல் நடைமுறையில் உள்ளது.
இதே போன்ற நடைமுறைய மத்தியப்பிரதேசம் மற்றும் குவாஹாத்தியில் கொண்டு வந்த பொழுது மிகபெரும் எதிர்ப்பினை சந்தித்தால் இந்த திட்டம் கை விடப்பட்டது. மேலும் இருசக்கர வாக ஓட்டிகள் ஹெல்மெட்க்கு பதிலாக வேறு பொருட்களை மாட்டி வந்தனர்.
இந்த திட்டம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில் ஹெல்மெட் அனியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தால் வெற்றி பெறுமா ? உங்கள் கருத்து என்ன ? தெரிவியுங்கள்…
no helmet no petrol rules