டெஸ்லா நிறுவன தலைவர் மற்றும் கண்டுபிடிப்பாளர் எலான் மஸ்க் கனவு திட்டங்களில் ஒன்றான ஹைப்பர்லூப் என்றால் என்ன ? ஹைப்பர்லூப்பில் உள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
நிலம், நீர், விமானம், விண்வெளிப் பயணம் என பயன்பாட்டில் உள்ள போக்குவரத்து சாதனங்களுக்கு மாற்றாக எலான் கற்பனையில் உருவான திட்டமே 5வது போக்குவரத்து திட்டம் ஹைப்பர்லூப் ஆகும்.
ஹைப்பர்லூப்
- முதன்முறையாக 2012 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கான முதல் தகவலை மஸ்க் வெளியிட்டார்.
- மணிக்கு 1200 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக போக்குவரத்து சார்ந்த சாதனமாகும்.
- உலகின் முதல் ஹைப்பர்லூப் சேவையை தொடங்கும் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்கும்.
ஹைப்பர்லூப் என்றால் என்ன ?
வெற்றிடக் குழாய்களில் கேப்சூல் வாகனத்தில் பயணிகள் அமர்ந்து அதிவேகமாக பயணம் செய்யும் வகையில் ஐந்தாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து முறையே ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகின்றது.
கேப்சூல் (பாட்ஸ்) எனப்படுவது அவரையின் உள்ளே அமைந்திருக்கும் பட்டாணி விதைகள் போன்ற வாகனமாகும்.
நெரிசல் மிகுந்த போக்குவரத்து சாலைகள் , அதிக நேரம் பயணிக்க வேண்டிய ரயில் பயணங்கள் , அதிக கட்டணத்தில் குறைவான நேரத்தில் பயணிக்கும் வகையிலான விமான போக்குவரத்து போன்ற முக்கிய போக்குவரத்து சாதனங்களின் மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நுட்பம் மற்ற போக்குவரத்து சாதனங்களை விட வேகமாக என்பதனை விட அதிவேகமாக மணிக்கு 760 மைல்கள் அதாவது 1200 கிமீ வேகத்தில் பயணம் மேற்கொள்வதுடன் பாதுகாப்பான அம்சங்களை கொண்டதாகவும் ரயில் போக்குவரத்தை விட குறைந்த கட்டுமான செலவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சூரிய சக்தியில் இயங்குகின்ற வகையில் இந்த நுட்பம் அமைந்திருக்கும்.
எவ்வாறு இயங்குகின்றது ?
கன்கார்ட் விமானத்தின் வடிவமைப்பு தத்துவம், ரெயில் கன் தத்துவம் மற்றும் ஏர் ஹாக்கி விளையாட்டின் தத்துவம் என மூன்றின் கலவையில் உருவான நுட்பேமே ஹைப்பர்லூப்பின் அடிப்படை அம்சமாகும்.
கன்கார்ட் விமானங்கள் மிக வேகமாக எதிர் காற்றினால் ஏற்படுகின்ற இழப்பினை கட்டுப்படுத்தி மிக சிறப்பான ஏரோ டைனமிக்ஸ் அம்சத்தை கொண்ட வடிவத்தை கேப்சூல் அமைப்பு பெற்றிருக்கும்.
ஏர் ஹாக்கி என்கிற விளையாட்டின் அடிப்படை கோட்பாடான காற்றின் உதவியுடன் வழுக்கி செல்லும் பொருட்கள், மேஜை போன்ற அமைப்பை கொண்ட ஏர்ஹாக்கி விளையாட்டின் போர்டு மேற்புறத்தில் ஏராளமான காற்றுத் துளைகள் இருக்கும். அந்த மேஜையின் கீழே, இயந்திரத்தின் உதவியுடன் காற்று உள்செலுத்தப்படுவதனால், அந்த மேஜைக்கும், தட்டுக்கும் இடையேயான உராய்வு குறைந்து, இடைவெளி ஏற்பட்டு எளிதாக வழுக்கி செல்லும். இதே போல ஹைப்பர்லூப்பின் கேப்சூல்களில் அழுத்தம் பாதியாக குறைக்கப்படும். பின்னர் காந்த சக்தி மூலம் கேப்சூலை உயர்த்தி, அந்த கேப்சூலுக்கும் தரைக்கும் இடையேயான உராய்வு குறைக்கப்படும் என்பதனால் கேப்சூல் வாகனம் மிக வேகமாக பயணிக்கும் வகையில் மாறும்.
ரெயில் கன் தத்துவம் மின் ஆற்றலை எடுத்துச்செல்லும் ஒரு உலோகத்தை, இரு காந்தங்களுக்கு இடையில் வைக்கும்பொழுது அந்த உலோகம் நகரும் என்பது ரெயில் கன் அடிப்படை தத்துவம். இதுதான் ஹைப்பர்லூப் கேப்சூலுக்கு உந்துசக்தியை வழங்கும், கேப்சூல் மின்சக்தியை எடுத்து செல்லும். கேப்சூலை சுற்றி இருக்கும் லூப்பில் காந்த சக்தி இருக்கும். இதனால் கேப்சூல் முன்னோக்கி செல்லும்.
ஹைப்பர்லூப்ஒன்
எலான் மஸ்க் முதன்முறையாக இந்த நுட்பத்தை பற்றி பல்வேறு தகவல்களை விரிவாக தனது வலைதளத்தில் பதிவு செய்ததை தொடர்ந்து இதற்கான ஆரம்பகட்ட பணிகளை டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (டெஸ்லாவின் அங்கம்) என்ஜினியர்கள் முதற்கட்ட ஆய்வுகளை ஹைப்பர்லூப்ஒன் என்ற நிறுவனத்தின் பெயரில் தொடங்கினர்.
திறந்த வெளி நுட்பமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு நிறுவனங்களும் இது குறித்தான ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் ஈடுபட்டு வருகின்றது.
இந்தியாவில் ஹைப்பர்லூப் நுட்பத்தை செயல்படுத்த டெஸ்லா நிறுவனம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின்முன்னணி போக்குவரத்து துறையாக ஹைப்பர்லூப் விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.