ஹோண்டா இந்திய பிரிவு வரலாற்றில் அமேஸ் செடான் காரின் விற்பனை மிக பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது. ஹோண்டா அமேஸ் அறிமுகம் செய்யப்பட்ட 4 மாதங்களில் 30000 கார்களை விற்பனை செய்துள்ளது.
சிறப்பான இடவசதி, அதிகப்படியான மைலேஜ் மற்றும் ஹோண்டாவின் என்ஜின் தரம் என பலவற்றை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டுள்ள அமேஸ் தொடர்ந்து முன்பதிவிலும் குறைவில்லாமல் பதிவு செய்யப்படுகின்றது.
டீசல் அமேஸ் காரின் அபரிதமான மைலேஜ் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சிறப்பான சொகுசு தன்மையை அமேஸ் வழங்குகின்றது.
இந்திய மக்களின் குடும்ப காராக அமேஸ் வலம் வரவேண்டும் என்பதே ஹோண்டாவின் நம்பிகையாகும்.