Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா கனெக்ட் செயலி அறிமுகம்

by automobiletamilan
டிசம்பர் 16, 2015
in செய்திகள்

ஹோண்டா நிறுவனம் தன்னுடைய கார்களின் உரிமையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் ”’ ஹோண்டா கனெக்ட் ” என்ற பெயரில் அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

honda-connect

கார் மற்றும் உரிமையார்களுக்கு இடையிலான சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா கனெக்ட் அப்ளிகேஷன் வாயிலாக மேம்படுத்தப்பட்ட நவீன தொடர்பினை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

ஹோண்டா கனெக்ட் அப்ளிகேஷன் வாயிலாக இனையும் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் , மிக பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் உணரும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.2999 விலையில் முதல் 20,000 வாடிக்கையாளர்கள் கனெக்ட்டு டிவைஸ் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஹோண்டா கனெக்ட் வசதிகள் என்ன ?

  1. சர்வீஸ் புக்கிங் / அலர்ட்

சர்வீஸ் தொடர்பான சேவைகளை நினைவுப்படுத்துதல் மற்றும் சரியான கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதனை நினைவுப்படுத்தும் புஸ் குறுஞ்செய்திகள் கிடைக்கும். சர்வீஸ் வரலாறு தெரிந்து கொள்ள இயலும்.

2. வாட்’ஸ் நியூ அண்ட் (மற்றும்) ஃபீட்பேக் சிஸ்டம்

புதிய மாடல்கள் அறிமுகம் மற்றும் கேம்ப் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள அலர்ட் வசதி உள்ளது. மாடல்களின் ஃபீட்பேக் போன்றவற்றை பதிவு செய்ய இயலும்.

3. மெனுவல் எஸ்ஓஎஸ் வசதி

ஏதேனும் அவசர தேவையெனில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விரைவாக தொடர்பு கொள்ளும் வகையில் எஸ்ஓஎஸ் வசதி உள்ளது.

4. காப்பீடு மற்றும் பியூசி புதுப்பித்தல்

காப்பீடு கட்டனம் புதுப்பிக்க நினைவுபடுத்தும் வசதி மற்றும் பியூசி ( PUC- Pollution under control ) புதுப்பித்தல் போன்றவற்றை நினைவுபடுத்தும்.

hondaConnect

5. எரிபொருள் லாக்

எரிபொருள் நிரப்ப வேண்டியதை அலர்ட் செய்யும் வசதி , மைலேஜ் விபரம் , ஓடோமீட்டர் ரீடிங்கினை பெற இயலும்.

6. டாக்குமென்ட் வாலட்

முக்கியமான புகைப்படங்களை டாக்குமென்ட் வால்ட் மூலம் பாதுகாப்பாக வைக்க இயலும்.

7. பிட் ஷாப்

சர்வீஸ் சென்டரல் எரிபொருள் நிரப்பும் நிலையம் , நேவிகேஷன் வசதி , உதவி மைய தொடர்பினை பெற இயலும்.

8 . இம்பேக்ட் அலர்ட்

எதிர்பாரத சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தால் தானியங்கி முறையில் ஹோண்டா 121 சேவைக்கு கால் தொடர்பினை ஏற்படுத்தி கொள்ளும்.

9. கார் இருக்கும் இடம்

உரிமையாளர்கள் கார் இருக்கும் இடத்தினை தெரிந்து கொள்ளலாம்.

10 ஷேர் மை லோகேஷன்

எங்கே உள்ளோம் எனபதனை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இதுபோன்ற சிறப்பான சேவைகளை ஹோண்டா கனெக்ட் வழங்குகின்றது.

 

 

Tags: Honda
Previous Post

மஹிந்திரா கேயூவி100 டீசர் வெளியீடு – Mahindra KUV100

Next Post

சிபி ஹார்னெட் 160R Vs சிபி யூனிகார்ன் 160 – ஒப்பீடு

Next Post

சிபி ஹார்னெட் 160R Vs சிபி யூனிகார்ன் 160 - ஒப்பீடு

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version