ஹோண்டா குஜராத் ஆலை திறப்பு – அனந்திபென் படேல்

குஜராத் முதல்வர் அனந்திபென் படேல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 4வது தொழிற்சாலையை தொடங்கி வைத்தார். உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையாக விதாலாபூர் பகுதியில் அமைந்துள்ள ஹோண்டா ஆலை விளங்கும்.

 

சுமார் 1100 கோடி முதலீட்டில் கட்டமைக்கபட்டுள்ள இந்த ஆலையுடன் சேர்த்து ஆண்டிற்கு 58 லட்சம் இருசக்கர வாகனங்களை  உற்பத்தி செய்ய இயலும். இந்த தொழிற்சாலை மூலம் 2200 கோடி முதலீட்டை பெற்றுள்ள குஜராத்தில் நேரடியாக 3000 பேரும் இதை சார்ந்து 6000 பேரும் என மொத்தம் 9000 நபர்கள் வேலை வாய்ப்பினை பெறுவர்.

250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஆண்டிற்கு 6 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் முதல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் மத்தியில் ஆண்டிற்கு 6 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் இரண்டாவது பிரிவு தொடங்கும். மேலும் வருடத்திற்கு 12 லட்சம் தானியங்கி ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்ய முடியும்.

முதலாவதாக

  • உலகிலே முதன்முறையாக 24 மணி நேரமும் ரோபவின் மூலம் செயல்படும் பிரஸ் ஷாப்
  • தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படாத வகையில் ரோபக்கள் உதவியுடன் செயல்படும்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு தபுகாரா , நரசாபுரா மற்றும் மானசேர் போன்ற இடங்களிலும் தொழிற்சாலை உள்ளது.

 

 

Share