ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் கார் சீனா

பிரசத்தி பெற்ற ஹோண்டா சிட்டி காரின் அடிப்படையிலான சிட்டி ஹேட்ச்பேக் கார் ஜீனியா என்ற பெயரில் படங்கள் வெளியாகியுள்ளது. சிட்டி காரை அடிப்படையாக கொண்ட ஜீனியா இந்தியா வரும் வாய்ப்புகள் பற்றி எந்த தகவலும் இல்லை.

Honda-City-hatchback-Honda-Gienia-front-leaked

ஹோண்டா கான்செப்ட் பி மாடலை அடிப்படையாக கொண்ட ஜீனியா மாடலானது சீனாவில் விற்பனை செய்யப்படும் சிட்டி காரின் மாற்றுப்பெயரை கொண்ட ஹோண்டா ஜீரீயஸ் காரின் ஹேட்ச்பேக் மாடலாகும்.

ஜீனியா காரின் வெளிதோற்றம் கான்செப்ட் பி மாடலை போன்றே மிக அகலமான முன்பக்க கருப்பு வண்ண கிரிலுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.  க்ரோம் பட்டை போன்றவை காரின் தோற்றத்தினை எடுப்பாக வழங்குகின்றது.

பக்கவாட்டில் ஹோண்டா சிட்டி தோற்றத்தையே பெற்றுள்ள மாடலில் பின்புறத்தில்  பட்டையுடன் டெயில் விளக்கு போன்றவை சிவிக் காரின் தோற்றத்தினை சார்ந்துள்ளது. 128.6 hp ஆற்றல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலுடன் 5 வேக மெனுவல் மற்றும் சிவிடி  ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்று விளங்குகின்றது.

Honda-City-hatchback-Honda-Gienia-rear-leaked-in-China-

அடுத்த சில மாதங்களில் சீனாவில் விற்பனை செய்யப்பட உள்ள ஜீனியாமாடல் இந்திய சந்தைக்கு வருமா எனபதற்கு உறுதியான தகவல்கள் இல்லை.

படம் ; Autohome.cn