ஹோண்டா ஜாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காருக்கு ஜூன் 20ந் தேதி முதல் முன்பதிவு தொடங்குகின்றது. சில டீலர்களிடம் முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டாலும் அதிகாரப்பூர்வமாக ஜூன் 20ந் தேதி தொடங்க உள்ளது.
ஹோண்டா ஜாஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரண்டு ஆப்ஷனில் விற்பனைக்கு வரவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் மெனுவல் மற்றும் தானியங்கி சிவிடி கியர்பாக்சிலும் கிடைக்கும்.
ஹோண்டா ஜாஸ் ரூ.5 முதல் 8.5 லடசத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. முன்பதிவு தொகையாக ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை ஆகும். ஜாஸ் காருக்கு போட்டியாக விளங்கும் கார்கள் எலைட் ஐ20 , போலோ , போல்ட் மற்றும் ஸ்விஃப்ட்.
ஹோண்டா ஜாஸ் வெற்றி பெறுமா ?
All New Honda Jazz bookings open