ஹோண்டா டபுள்யூஆர்-வி (WR-V) க்ராஸ்ஓவர் மார்ச் 2017 வருகை

0

க்ராஸ்ஓவர் ரகத்தில் மிக சிறப்பான ஸ்டைலிங் கொண்ட மாடலாக வரவுள்ள ஹோண்டா டபுள்யூஆர்-வி மாடல் ஜாஸ் ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். ஹோண்டா WR-V மார்ச் 2017ல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

க்ராஸ்ஓவர் ரக கார்களுக்கே உரித்தான பாடி ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக புதிய பம்பர் , நேர்த்தியான க்ரோம் கிரில் ,வட்ட வடிவ பனி விளக்கு , புதுப்பிக்கப்பட்ட ஹெட்லேம்ப் போன்றவற்றை பெற்றதாக டபுள்யூஆர்-வி விளங்கும் . இன்டிரியரில் ஜாஸ் கார் போன்ற டேஸ்போர்டு, இருக்கை அமைப்பு பெற்றிருந்தாலும் , புதிய நிறங்கள் மற்றும் வசதிகள் கூடுதலாக இடம் பெற்றிருக்கும்.

Google News

பொதுமக்கள் பார்வைக்கு வருகின்ற சா பவுலோ ஆட்டோ ஷோ அரங்கில் வெளியாக உள்ள நிலையில் இதில் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

ஃபியட் அர்பன் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ் , டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் மற்றும் வோக்ஸ்வேகன் க்ராஸ் போன்ற மாடல்களுக்கு ஹோண்டா WR-V சவலாக அமையும். ஜாஸ் மாடலை விட சில ஆயிரங்கள் கூடுதலாக இருக்கும்.