ஹோண்டா பைக் விலை குறைகின்றதா ?

0
இந்தியாவின் முன்னணி இரு சக்கர தயாரிப்பாளர்களில் ஹோண்டா நிறுவனமும் ஒன்று. ஹோண்டா நிறுவனத்தின் பவரான பைக்கள் விலை சற்று கூடுதலாகத்தான் உள்ளது. எனவே இந்த பைக்களின் விலை குறைய இவற்றை இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் அல்லது அசெம்பிள் செய்தால் விலை குறைவாகும்.

அதிக திறன் கொண்ட இறக்குமதி செய்யப்படும் பைக்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்டது. இதனால் விற்பனை சரி வாய்ப்புள்ளது. எனவே இவற்றை இந்தியாவிலே அசெம்பிள் செய்தால் பைக் விலை குறையும் எனவே அதிக திறன் கொண்ட மோட்டர் சைக்கிள்களை இந்தியாவிலே அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது.

CB1000R

இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் உள்ள அதிக திறன் கொண்ட ஹோண்டா பைக்கள் சிபி1000ஆர், சிபி1000ஆர்ஆர் ஃபயர்பிளேட், விஎஃப்ஆர் 1300சிஎக்ஸ் போன்ற பைக்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை இந்தியாவிலே அசெம்பிள் செய்தால் விலை குறையும்.

Google News

ஹோண்டா  சிபிஆர் 500ஆர் பைக் முதல்கட்டமாக இந்தியாவிலே அசெம்பிள் செய்யப்படுகின்றது.