ஹோண்டா மீன் மூவர் டிராக்டர்

0
ஹோண்டா நிறுவனம் மிக வேகமான புல் நறுக்கும் டிராக்டரை சோதனை செய்துள்ளது. ட்ரீம் டைனமிக்ஸ் குழுவுடன் இணைந்து வேகமான புல் நறுக்கும் டிராக்டரை உருவாக்கியுள்ளது.

ஹோண்டா மீன் மூவர் ஆனது ஹோண்டாவின் எச்எஃப் 2620 லான் மூவரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். எச்எஃப் 2620 லான் மூவர் 12கிமீ வேகத்தில் மட்டுமே புற்களை வெட்டும்.

Honda Mean Lawn Mower

மணிக்கு 209கிமீ வேகத்தில் செல்ல முடியும் ஆனால் மணிக்கு 24கிமீ வேகத்தில் செல்லும்பொழுது மட்டும்தான் புற்களை வெட்டமுடியும். இதற்க்கான ஆற்றலை ஹோண்டா விடிஆர் ஃபயர்ஸ்டார்ம் பைக்கின் 1000சிசி என்ஜின் தருகின்றது.  106பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 96என்எம் ஆகும். 6 வேக பெடல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புற்களை வெட்டுவதற்க்காக 4000ஆர்பிஎம் வேகத்தில் சூழலக்கூடிய இரண்டு மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். மிக சிறப்பான சஸ்பென்ஷனை தரும் வகையில் ஏடிவி வாகனங்களில் பயன்படுத்தப்படும் சஸ்பென்ஷன்களை தந்துள்ளது.

Honda Mean Mover