அர்மான் இப்ராஹிம் இந்தியாவின் முதல் FIA GT1 வீரர்

அர்மான் இப்ராஹிம்  FIA GT1 உலக சேம்பியன்ஷிப்பில் பங்கேற்க்கும் முதல் இந்தியர் ஆவார். பிஎம்டபிள்யூ  ஸ்போர்ட்ஸ் ட்ராப்பி -ஜிடி1 இந்திய அணியுடன் இதற்க்கான 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இவருடைய அணியில் இத்தாலி நாட்டின் டிரைவர் மேட்டியோ கிர்ஸ்சனாய் பங்கேற்பார். பிஎம்டபிள்யூ இசட்4 ஜிடி 1 கார் இந்த போட்டியில் பயன்படுத்த உள்ளனர். இந்த கார் வெளிப்படுத்தும் ஆற்றல் 558 பிஎஸ் வெளிப்படுத்தும்.

இந்த FIA GT1 உலக சேம்பியன்ஷிப்பில் போட்டியில் ஆடி, ஆஸ்டன் மார்டின், லம்போர்கினி, போர்ஸ்ச், போர்டு ஃபெராரி, மெர்சிடிஸ் போன்ற நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.

அர்மான் இப்ராஹிம் இது பற்றி கூறுகையில்  பார்முலா கார்களில் இருந்து ஜிடி கார்களுக்கு செல்வது மிக சவாலான அனுபவமாக இருக்கும். இந்த தொடர் முழுவதும் பங்கேற்க விரும்புகிறேன். ஜிடி 1 ரேஸ்களில் கடந்த வருடம் மாஸ்கோவில் பங்கேற்ற அனுபவம் சிறப்பாக இருந்த்து.

அர்மான் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜிடி 1 யில் போர்டு ஜிடி 40 காரை சன் ரெட் அணிக்காக சிறிய அளவில் பங்கேற்றுள்ளார்.

மேட்டியோ ஜிடி 1 போட்டிகளில் மிக அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். மேட்டியோ தரம் கோல்டு டிரைவர் மதிப்புள்ளவர். அர்மான் இப்ராஹிம் தரம் சில்வர் டிரைவர் ஆகும்.

ஆறு சுற்றுகள் நடைபெறும் இந்த போட்டி வருகிற ஏப்ரல் 1 பிரான்சில் தொடங்குகின்றது.

Exit mobile version