Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

க்ரெட்டா எஸ்யுவி வெற்றி பெறுமா ? – விமர்சனம்

By MR.Durai
Last updated: 18,July 2015
Share
SHARE
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி வரும் 21ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் க்ரெட்டா எஸ்யுவி சிறப்புகள் மற்றும் விலை விபரம் க்ரெட்டா வெற்றி பெறுமா ? என இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
க்ரெட்டா எஸ்யுவி
Hyundai creta suv

முன்பதிவு தொடங்கப்பட்ட சில வாரங்களில் 28,500 க்கு மேற்பட்ட விசாரிப்புகளுடன் 10,000த்திற்க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களின் முன்பதிவு என க்ரெட்டா விற்பனைக்கு வருவதற்க்கு முன்பாக நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

க்ரெட்டா தோற்றம்

சீனாவில் `iX25 என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் க்ரெட்டா இந்திய சந்தையிலும் அதே தோற்ற அமைப்பில் வரவுள்ளது. க்ரெட்டா முகப்பில் மூன்று குரோம் பட்டைகளுக்கு மத்தியில் ஹூண்டாய் லோகோ பதிக்கப்பட்டுள்ளது.

செங்குத்தான நிலையில் பனி விளக்குகள் , புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர விளக்குகள் என முகப்பில் கம்பீரத்தினை கொண்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி

பக்கவாட்டில் ஃபூளூடிக் 2.0 டிசைன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி  பக்கவாட்டில் புரஃபைல் கோடுகள் நேர்த்தியாக உள்ளது. மேலும் 17 இஞ்ச் ஆலாய் வீலை பெற்றுள்ளது.

பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் , பதிவென் பிளேட்டுக்கு மேல் குரோம் பட்டையை பெற்றுள்ளது. இது சற்று கவரவில்லை என்றாலும் எடுப்பாக தெரிகின்றது.

க்ரெட்டா எஸ்யுவி வண்ணங்கள் சில்வர் , வெள்ளை , டஸ்ட் , சிகப்பு , கருப்பு மற்றும் பீஜ் என மொத்தம் 7 கலர்களில் கிடைக்கும்.

க்ரெட்டா உட்புறம்

மிக சிறப்பான டேஸ்போர்டு அமைப்பினை கொண்டுள்ள க்ரெட்டாவில் 5 இஞ்ச் மற்றும் 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , ஸடீயரிங் வீலில் ஆடியோ மற்றும் போன் கட்டப்பாடு பொத்தான்கள் , யூஎஸ்பி , ஆக்ஸ் , பூளூடூத் தொடர்பு , டாப் வேரியண்டில் சில்வர் இன்சர்ட்  , லெதர் இருக்கைகள் என பிரிமியம் தோற்றத்தில் இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்கின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி

க்ரெட்டா என்ஜின்

2 டீசல் என்ஜின் மற்றும் 1 பெட்ரோல் என்ஜின் என மூன்று விதமான ஆப்ஷனில் விற்பனைக்கு வரும். மேலும் மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும்.

120பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டார்க் 155என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 15கிமீ ஆகும்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி

87பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 220என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 20கிமீ ஆகும்.

125பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர்.  இதன் டார்க் 259என்எம் ஆகும் . இதன் மைலேஜ் லிட்டருக்கு 21கிமீ ஆகும்.

6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் வரவுள்ளது.

க்ரெட்டா சிறப்பம்சங்கள்

5 மற்றும் 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , ரியர் ஏசி வசதி , எம்பி3 , பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ் இன் தொடர்புகள் , பார்க்கிங் சென்சார் எலக்ட்ரிக் ஃபோல்டெபிள் ORVM , இஎஸ்பி , லெதர் இருக்கைகள் போன்ற சிறப்புகள் உள்ளன.

க்ரெட்டா பாதுகாப்பு வசதிகள்

க்ரெட்டா எஸ்யுவி காரில் ஏபிஎஸ் , டில்ட் ஸ்டீயரிங் அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக உள்ளது. ரியர் கேமரா , விபத்தின் பொழுது தானாக திறந்துகொள்ளும் கதவுகள், இரட்டை காற்றுப்பைகள் உள்பட பக்கவாட்டு மற்றும் கர்டைன் காற்றுப்பைகளை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.

க்ரெட்டா எஸ்யுவி

க்ரெட்டா பெட்ரோலில் மூன்று வேரியண்ட்கள் 1.4 லிட்டர் டீசலில் 3 வேரியண்ட் மற்றும் 1.6 லிட்டர் டீசலில் 4 வேரியண்ட் என கிடைக்கும்.

க்ரெட்டா போட்டியாளர்கள்

க்ரெட்டா எஸ்யுவி காருக்கு போட்டியாக டஸ்ட்டர் , டெரோனோ , ஈக்கோஸ்போர்ட் , வரவிருக்கும் எஸ் கிராஸ் என கடுமையான போட்டியாளர்களுடன் மோத உள்ளது.

க்ரெட்டா விலை விபரம்

க்ரெட்டா பெட்ரோல் மாடல் விலை ரூ.9.10 லட்சத்தில் தொடங்கி ரூ.11.80 லட்சத்திற்க்குள் இருக்கும்.

க்ரெட்டா டீசல் மாடல் விலை ரூ.9.90 லட்சத்தில் தொடங்கி ரூ.14.20 லட்சத்திற்க்குள் இருக்கும்.

க்ரெட்டா வெற்றி பெறுமா ?

மிக சிறப்பான ஸ்டைல் , சக்திவாய்ந்த என்ஜின் , மெனுவல் மற்றும் தானியங்கி என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள க்ரெட்டா நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை..

[youtube https://www.youtube.com/watch?v=wM_THVwWoSk]

Hyundai Creta SUV review

2025 ktm 390 adventure r
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
TAGGED:Hyundai
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
bajaj chetak escooter
Bajaj
2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்
2025 yamaha rayzr 125 fi hybrid
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம்,
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms