Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடா ஏஸ் vs தோஸ்த் vs மேக்சிமோ- ஒப்பீடு

by MR.Durai
6 January 2025, 1:41 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

ஏன் இந்த ஏமாற்று வேலை – மைலேஜ் தகவல்

10 முதல் 20 லட்சம் விலையில் சுற்றுலா செல்ல ஏற்ற கார் எது ?

எந்த பைக் வாங்கலாம் கிளாமர் vs சல்யூடோ – Auto Tamil Q&A

ஹோண்டா லிவோ பைக் வாங்கலாமா ? – Auto Tamil Q&A

ஸ்பிளென்டர் Vs பிளாட்டினா Vs ஸ்டார் சிட்டி ப்ளஸ் Vs செஞ்சூரோ – Auto Tamil Q&A

யமஹா ஃபேஸர் மற்றும் ஃஎப்இசட் வாங்கலாமா?

இலகுரக டிரக்களில் டாடா  ஏஸ் முன்னிலை வகிக்கும் எல்சிவி ஆகும். மேலும் இதன் சக போட்டியாளர்களாக விளங்கும் அசோக் லேலண்ட் தோஸ்த் மற்றும் மஹிந்திரா மேக்சிமோ போன்றவைகளும் சிறப்பான வளர்ச்சி அடைந்துவருகின்றது.

ஏஸ், தோஸ்த் மற்றும் மேக்சிமோ என மூன்றினையும் ஒப்பிடாக கானலாம்.

சின்ன யானை என்ற அடைமொழியுடன் 2005 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள டாடா ஏஸ் சிறப்பான முத்திரை பதித்த மினி டிரக் ஆகும்.

சூப்பர் ஏஸ்

நல்ல சிறப்பான இடவசதி கொண்டதாக அசோக் லேலண்ட் தோஸ்த் விளங்குகின்றது.  வாடிக்கையாளர்களின் அனுபவத்தின் படி 2.5 முதல் 3 டன் வரை இலகுவாக ஏற்ற முடிகின்றதாம். சக்தி வாய்ந்த எஞ்சினுடன் விளங்கும் தோஸ்த் நன்மதிப்பினை பெற்று வலம் வருகின்றது.

மஹிந்திரா மேக்சிமோ ப்ளஸ் டிரக்கில் ஃப்யூல் ஸ்மார்ட் டெக்னாலஜி என்ற நவீன நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த நுட்பமானது. நமக்கு விருப்பமான தேர்வினை செய்ய உதவுகின்றது, அதாவது எரிபொருள் சிக்கனம்(மைலேஜ்) அல்லது அதிகப்படியான ஆற்றல் என இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

எஞ்சின்

சூப்பர் ஏஸ் எஞ்சின்

1405 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 70பிஎச்பி ஆகும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தோஸ்த் எஞ்சின்

 1478 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 58பிஎச்பி மற்றும் டார்க் 157.5என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேக்சிமோ ப்ளஸ் எஞ்சின்

909சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 26 பிஎச்பி மற்றும் டார்க் 55என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த தோஸ்த்

அசோக் லேலண்ட் தோஸ்த் மிக சக்தி வாய்ந்த எஞ்சினை கொண்டு செயல்படுகின்றது. மேலும் மற்ற இரண்டினை விட அதிகப்படியான பளு ஏற்றவும் மிக சுலபமாக வாகனத்தினை அதிகமான பளுவுடன் இயக்க முடியும்.

அசோக் லேலண்ட்
பளுதாங்கும் திறன்
சூப்பர் ஏஸ்
சூப்பர் ஏஸ் பளு தாங்கும் மொத்த திறன் எடை 2180கிலோ ஆகும். 1180 கிலோ வரை எடையினை ஏற்றினாலும் இலகுவாக இயக்க முடியும்.  கார்கோ பாடியின் நீளம், அகலம் மற்றும் உயரம் 2630மிமீx1460மிமீx300மிமீ.
தோஸ்த்
தோஸ்த் பளு தாங்கும் மொத்த திறன் எடை 2500 கிலோ ஆகும். 1250 கிலோ வரை எடையினை ஏற்றினாலும் இலகுவாக இயக்க முடியும்.  கார்கோ பாடியின் நீளம், அகலம் மற்றும் உயரம் 2500மிமீx1460மிமீx270மிமீ.
மேக்சிமோ ப்ளஸ்
மேக்சிமோ ப்ளஸ் பளு தாங்கும் மொத்த திறன் எடை 1815 கிலோ ஆகும். 850கிலோ வரை எடையினை ஏற்றினாலும் இலகுவாக இயக்க முடியும்.  கார்கோ பாடியின் நீளம், அகலம் மற்றும் உயரம் 2280மிமீx1540மிமீx330மிமீ.
2000 கிலோ எடை தாங்கும் தோஸ்த்

சூப்பர் ஏஸ் 1200கிலோ முதல் 1500 கிலோ எடை வரை இலகுவாக இயக்க முடியும். அதனை விட தோஸ்த் 1300 கிலோ முதல் 2000 கிலோ வரை ஏற்றினாலும் தின்றாமல் பயணிக்கின்றது.
மைலேஜ் விவரம்
ஏஸ்
சூப்பர் ஏஸ் மைலேஜ் சராசரியாக வாடிக்கையாளர்களின் அனுபவத்தினை பார்த்தால் லிட்டருக்கு 12கிமீ முதல் 15கிமீ வரை கிடைக்கின்றதாம் 
தோஸ்த்
தோஸ்த் மைலேஜ் சராசரியாக வாடிக்கையாளர்களின் அனுபவத்தினை பார்த்தால் லிட்டருக்கு 11கிமீ முதல் 13கிமீ வரை கிடைக்கின்றதாம் 
மேக்சிமோ ப்ளஸ்
மேக்சிமோ ப்ளஸ் ஈக்கோ என்ற நவீன நுட்பத்துடன் விளங்குவதனால் பவர் ஆப்ஷன் மற்றும் மைலேஜ் ஆப்ஷன் என இரண்டினையும் பயன்படுத்தலாம். மேக்சிமோ ப்ளஸ் மைலேஜ் லிட்டருக்கு 21.1 கிமீ ஆகும்.
மேக்சிமோ ப்ளஸ்
பல நவீன வசதிகளுடன் ஏஸ், தோஸ்த் மற்றும் மேக்சிமோ ப்ளஸ் விற்பனையில் உள்ளது. இவற்றில் லோட் லிமிட் போன்றவற்றை அறிவிக்கும் வசதிகளும் உள்ளன.
விலை விபரங்கள் (சென்னை விலை)
ஏஸ் டிரக்கில் 4 விதமான வேரியண்ட் உள்ளது. அவற்றில் சூப்பர் எஸ் மட்டும் அதிக எடை திறன் தாங்குவதாக உள்ளது.
சூப்பர் ஏஸ் ரூ.4.61 லட்சம்
தோஸ்த் ரூ. 4.26 லட்சம் முதல் 4.73 லட்சம் வரை
மேக்சிமோ ப்ளஸ் ரூ.3.53 லட்சம்
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
தோஸ்த் மிக சிறப்பான எடை தாங்கும் திறன் மற்றும் சிறப்பான சக்தியை வெளிப்படுத்தும் எஞ்சின் என விளங்குகின்றது. மேலும் சூப்பர் ஏஸ் நல்ல முத்திரை பதித்து பல வருடங்களாக விற்பனையில் உள்ள டிரக் ஆகும். மேக்சிமோ ஈக்கோ ஆப்ஷனுடன் விளங்குகின்றது.
1. அசோக் லேலண்ட் தோஸ்த்
2. டாடா சூப்பர் ஏஸ்
3. மஹிந்திரா மேக்சிமோ ப்ளஸ்
முகநூல் வாசகர் அருள்தாஸ் விருப்பமாக இந்த பதிவு வெளியிடப்பட்டது.
Tags: QA
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ரூ.2.67 லட்சம் வரை சிட்ரோயன் கார்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan