டாடா ஸெஸ்ட் காருக்கு 4 நட்சத்திர மதிப்பீடு – குளோபல் என்சிஏபி

இந்திய வாகன தயாரிப்பாளரின் தரத்தை நிரூபிக்கும் வகையில் குளோபல் என்சிஏபி சோதனையில் பெரியவர்களுக்கு 5க்கு 4 நட்சத்திர மிதிப்பீட்டினை பெற்று டாடா ஸெஸ்ட் கார் சர்வதேச க்ராஷ் டெஸ்ட் அமைப்பின் பாரட்டுதலை பெற்றுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச க்ராஷ்டெஸ்ட் அமைப்பான குளோபல் என்சிஏபி  நடத்தும் #SaferCarsforIndia என்ற  பிரச்சாரத்தின் வாயிலாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல்வேறு கார்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

சர்வதேச தயாரிப்பாளர்களின் பல கார்கள் பூஜ்ய நட்சத்திர மதிப்பினை பெற்ற நிலையில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் தயாரித்த ஸெஸ்ட் செடான் காரின் முதற்கட்ட சோதனையில் காற்றுப்பை வசதி இல்லாத மாடல் பெரியவர்களுக்கு பூஜ்ய நட்சத்திரமும் குழந்தைகளுக்கு 1 நட்சத்திர அந்தஸ்த்தை மட்டுமே பெற்றது.

முன்பக்க இரட்டை காற்றுப்பை , பின்புற இருக்கைகளுக்கான இருக்கை பட்டை போன்ற வசதிகளுடன்கூடிய மாடலை மோதலின் பொழுது சோதனை செய்யப்பட்டதில் வயது வந்தோருக்கான பிரிவில் ஸெஸ்ட் கார் 5க்கு 4 என்ற தர மதிப்பீட்டை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு 2 நட்சத்திர அந்தஸ்த்தை மட்டுமே பெற்றது.

இதுகுறித்து குளோபல் என்சிஏபி அமைப்பின் பொது செயலர் டேவிட் வார்டு கருத்து தெரிவிக்கையில் டாடா மோட்டார்ஸ் ஸெஸ்ட் காரின் பாதுகாப்பு தரத்தை சிறப்பான முறையில் கட்டமைத்துள்ளதன் வாயிலாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனத்தின் தரம் நிருபீக்கப்பட்டுள்ளது. இருகாற்றுப்பை உள்ள டாடா ஸெஸ்ட் வேரியன்டை வாடிக்கையார்கள் தேர்ந்தேடுப்பது பாதுகாப்பினை உறுது செய்யும் என கூறியுள்ளார்.

காரின் கட்டமைப்பு தரம் ,பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவதோடு , வாகனம் மோதலை தடுக்கும் நுட்பங்களையும் சேர்ப்பது , விபத்தில் சிக்கினாலும் பாதிப்புகள் அதிகம் இல்லாத வகையில் நுட்பங்களை கொண்டு வரவேண்டும் என சாலை போக்குவரத்து கல்வி நிறுவனத்தின் தலைவர் ரோஹிஸ் பலூஜா தெரிவித்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=l3G99x0bNcM]

Exit mobile version