Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டைஹட்சூ பிராண்டு கார்கள் இந்தியா வருகை உறுதியாகின்றது

by MR.Durai
1 October 2016, 10:08 am
in Auto News
0
ShareTweetSend

டொயோட்டா மோட்டார் கார்பரேஷனின் அங்கமான டைஹட்சூ பட்ஜெட் பிராண்டில் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது.  வருகின்ற 2019 ஆம் ஆண்டுக்கு முன்னதாக டைஹட்சூ இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிசான் நிறுவனத்தின் டட்சன் பிராண்டு மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான கியா மோட்டார்ஸ் போன்று டொயோட்டா நிறுவனத்தின் தொடக்கநிலை சந்தைகளுக்கு ஏற்ற மாடலாக டைகட்சூ பிராண்டில் இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ள   மாடல்களை அடிப்படையாக கொண்டவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டு வருகின்றது.

டைஹட்சூ பிராண்டில் டட்சன் கோ+ எம்பிவி காருக்கு போட்டியாக டைகட்சூ சிகாரா எம்பிவி மாடல் உள்ளது. இதனை முதல் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. பட்ஜெட் பிராண்டு என்பதனால் பெரும்பாலான பாகங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படும் என்பதனால் மிகுந்த சவாலான விலையில் மாருதி சுஸூகி , ஹூண்டாய் , டட்சன் போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக அமையலாம்.  டொயோட்டா டீலர்கள் வாயிலாக கார்களை டைகட்சூ விற்பனை செய்யலாம்.

கியா மோட்டார்ஸ் வருகை

ரூ.5 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட மாடல்களை இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்யாத நிலையில் அவற்றை ஈடுக்கட்டும் நோக்கில் தனது பட்ஜெட் பிராண்டிலோ அல்லது டொயோட்டா பிராண்டிலோ தொடக்கநிலை மாடல்களை அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை ஆராய்ந்து வருவதனால் அடுத்த சில மாதங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எட்டியோஸ் ,லிவா கார்களை விட குறைவான விலையில் அமைந்திருந்தாலும் தரமானதாக டொயோட்டாவின் தரத்தை உறுதிசெய்யும் வகையில் அமைந்திருக்கும்.

டொயோட்டா மாடல்களான இன்னோவா க்ரீஸ்ட்டா , ஃபார்ச்சூனர் , கரோல்லா , கேம்ரி , லேண்ட் க்ரூஸர் பிராடோ மற்றும் லேண்ட் க்ரூஸர் போன்ற மாடல்கள் பிரிமியம் சந்தையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் எட்டியோஸ் ,லிவோ போன்றவை மட்டுமே தொடக்கநிலை சந்தையில்  உள்ளது.

லெக்சஸ் பிராண்டு

மேலும் டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் கார்களும் பெங்களூருவில் ஆலையில் தயாரிக்க உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களில் லெக்சஸ் பிராண்டில் கார்கள் வரவுள்ளது.  லெக்சஸ் ES 300h மாடல் ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய மாடலாகும்.

Related Motor News

டைஹட்சூ ராக்கி எஸ்யூவி கார் அறிமுகம் – 2019 டோக்கியோ மோட்டார் ஷோ

இந்தியாவில் களமிறங்க டொயோட்டா டைஹட்சூ ஆர்வம்..!

Tags: Daihatsu
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

gst slashed auto sector explained tamil

ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள் மற்றும் டூ வீலர்களுக்கு 18 % மட்டுமே.!

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!

350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?

நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்

வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்

BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan