போலரிஸ் ஆஃப்ரோடு வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. ஆஃப்ரோடு வாகனங்களுக்கான டிராக்களை நாடு முழுவதும் திறந்து வருகின்றது. சில நாட்களுக்கு முன் பெங்களூரில் ஆஃப்ரோடு வாகனங்களுக்கான இரண்டு டிராக்கினை திறந்துள்ளது.
								
								
															முன்பே போலாரிஸ் டிராக் உள்ள நகரங்கள் சென்னை, மும்பை, கோவை, மூணார், புனே, நாக்பூர்,  கிரெட்டர் நொய்டா, போபால் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ளது.
தற்பொழுது பெங்களூரில் இரண்டு டிராக்களை திறந்துள்ளனர். அவை சர்ஜாபுர் மற்றும் யஸ்வந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சர்ஜாபுரத்தில் கிடைக்கும் வாகனங்கள் அவுட்லா 50சிசி முதல் ஆர்இசட்ஆர்800சிசி வரை என 12 விதமான வாகனங்களை ஓட்டி பார்க்கலாம். சர்ஜாபுர் டிராக் 30,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.
 யஸ்வந்தபுர் டிராக் 20,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. இந்த டிராக்கில் 5 விதமான வாகனங்களை ஓட்டி பார்க்கலாம்.
இந்த ஆஃப் ரோடு டிராக்கள் சரிவுகள், பள்ளங்கள் சகதிகள், பாறைகள் போன்றவை இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்களில் முழுமையான ஆஃப்ரோடு அனுபத்தினை பெற முடியும். இந்த வருடத்திற்க்குள் நாடு முழுவதும் 25 டிராக்களை திறக்க திட்டடுமிட்டுள்ளனர்


