Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

மாருதி செலிரியோ vs செவர்லே பீட் vs ஹூண்டாய் கிராண்ட் i10 – ஒப்பீடு

By MR.Durai
Last updated: 9,June 2015
Share
SHARE
இந்தியாவிலே அதிக மைலேஜ் தரக்கூடிய கார் என்ற பெருமையுடன் மாருதி செலிரியோ டீசல் கார் விற்பனைக்கு வந்துள்ளது. சுசூகி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள முதல் டீசல் என்ஜின் செலிரியோ காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாருதி செலிரியோ

செலிரியோ டீசல் என்ஜின்

ரூ.900 கோடி முதலீட்டில் 2 சிலிண்டர் கொண்ட 793சிசி என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 47பிஎச்பி மற்றும் டார்க் 125என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். இலகுவான எடை கொண்ட செலிரியோ டீசல் என்ஜின் அலுமினியத்தால் உருவாக்கியுள்ளனர்.

சிறிய ரக கார்களில் அதிகப்படியான மைலேஜ் அதாவது லிட்டருக்கு 27.62கிமீ என ஆராய் தர சான்றிதழ் அளித்துள்ளது.

செலிரியோ பெட்ரோல் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. ஆனால் டீசல் மாடலில் ஏஎம்டி ஆப்ஷன் எப்பொழுது என்ற தகவல் இல்லை.

டீசல் மாடல் மட்டும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

செலிரியோ vs பீட் vs கிராண்ட் i10 – ஒப்பீடு

வடிவம்
மிக நேர்த்தியான இளம் வாடிக்கையாளர்களை கவரும் தோற்றத்தில் செவர்லே பீட் விளங்குகின்றது. கிராண்ட் ஐ10 காரின் தோற்றமும் முதல் தலைமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்கின்றது. செலிரியோ காரின் தோற்றத்தில் மாருதியின் பாரம்பரியமான தோற்றம் தான் தெரிகின்றது.
பரிமானங்கள்
செலிரியோ காரின் நீளம் 3600மிமீ , 1600மிமீ   அகலமும் கொண்டுள்ளது. செலிரியோ மற்றும் கிராண்ட் ஐ10 என இரண்டின் வீல்பேஸூம் 2425மிமீ ஆகும். கிராண்ட் ஐ10 கார் நீளம் 3765மிமீ , 1660மிமீ அகலமும் கொண்டுள்ளது. பீட்  நீளம் 3640மிமீ , 1595மிமீ   அகலமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2375மிமீ ஆகும்.
பீட் பூட் கொள்ளளவு 170 லிட்டர் , செலிரியோ பூட் கொள்ளளவு 235 லிட்டர் மற்றும் கிராண்ட் ஐ10 பூட் கொள்ளளவு 256 லிட்டர் ஆகும்.
ஹூண்டாய் கிராண்ட் i10
உட்புறம்
செலிரியோ காரின் உட்புறம் பெரிதான ஆர்வத்தினை தூண்டுவதில்லை. ஆனால் கிராண்ட் ஐ10 பல வசதிகள் மற்றும் ஸ்டைலான தோற்றத்தால் கவர்கின்றது. ஸ்போர்ட்டிவான தோற்றத்தில் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செவர்லே பீட் விளங்குகின்றது.
சிறப்பம்சங்கள்
அதிகப்படியான நவீன அம்சங்களை கிராண்ட் ஐ10 கொண்டுள்ளது. குறிப்பாக கீலெஸ் என்ட்ரி , ரீவர்ஸ் கேமரா , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இதுபோன்ற வசதிகள் பீட் மற்றும் செலிரியோவில் இல்லை என்றாலும் ஏபிஎஸ் , காற்றுப்பை , பூளூடூத் யூஎஸ்பி, ஆக்ஸ்-இன் போன்ற அம்சங்கள் டாப் வேரியண்டில் உள்ளது.
செவர்லே பீட்
என்ஜின்
கிராண்ட் i10 காரில் 70பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 158என்எம் ஆகும்.  5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
செவர்லே பீட் காரில் 56பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 150என்எம் ஆகும்.  5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
செலிரியோ காரில் 47பிஎச்பி ஆற்றலை தரவல்ல 0.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 125என்எம் ஆகும்.  5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
மைலேஜ்
கிராண்ட் ஐ10 மைலேஜ் லிட்டருக்கு 24கிமீ ஆகும். செவர்லே பிட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.44கிமீ ஆகும். செலிரியோ டீசல் மைலேஜ் லிட்டருக்கு 27.62கிமீ ஆகும்.
விலை விபரம் (ex-showroom Delhi)
கிராண்ட் ஐ10 கார் விலை ரூ.5.52 லட்சம் முதல் 6.74 லட்சம்
செவர்லே பீட் கார் விலை ரூ.5.06 லட்சம் முதல் 6.28 லட்சம்
செலிரியோ கார் விலை ரூ.4.65 லட்சம் முதல் 5.71 லட்சம்
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
மூன்று கார்களுமே மிக சிறப்பான வசதிகள் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. கிராண்ட் ஐ10 காரில் நவீன் அம்சங்கள் பலவற்றை கொண்டுள்ளதால் இதன் விலை மற்ற இரண்டை விடவும் சற்று கூடுதலாக உள்ளது. பீட் கார் ஸ்டைலான ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் கவர்ந்திழுக்கின்றது. செலிரியோ விலை மற்றும் அதிகப்படியான மைலேஜ் என்ற காரணத்தால் முதன்மையாக விளங்குகின்றது.
 
 
 
upcoming tvs bikes and scooters
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 125r
Hero Motocorp
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms