வரும் ஜனவரி 12ந் தேதி மெர்சிடீஸ் பென்ஸ் GLE 450 AMG கூபே ரக கார் மாடல் விற்பனைக்கு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பாக சர்வதேச அளவில் விற்பனைக்கு வந்த மெர்சிடீஸ் பென்ஸ் GLE 450 AMG கூபே கார் தற்பொழுது இந்தியாவிற்கு வரவுள்ளது.
சமீபத்தில் விற்பனைக்கு வந்த GLE எஸ்யூவி காரின் தாத்பரியங்களை அடிப்படையாக கொண்ட GLE 450 AMG மாடலில் 362 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 520என்எம் ஆகும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
மெர்சிடீஸ் பென்ஸ் GLE 450 AMG கார் 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 5.7 லிநாடிகள் எடுத்துக்கொள்ளும். கம்ஃபோர்ட் , சிலிப்பரி , ஸ்போர்ட் , ஸ்போர்ட் + மற்றும் இன்டியூஜவல் என 5 விதமான டிரைவிங் செலக்ட் மோடினை கொண்டுள்ளது.
நேர்த்தியான பம்பர்கள் அகலமான கிரில் போன்றவற்றுடன் ஸ்போர்ட்டிவான எல்இடி முகப்பு விளக்குகளை பெற்றிருக்கும். பக்கவாட்டில் எடுப்பான தோற்றத்தினை வழங்கும் அசத்தலான அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தில் எஸ் கிளாஸ் கூபே ரெ மாடலை தழுவியிருக்கின்றது.
உட்புறத்தில் ஜிஎல்இ எஸ்யூவி காரின் வசதிகளை பெருமபாலும் பெற்று விளங்குகின்றது. நாப்பா லெதர் சுற்றப்பட்ட ஸ்போர்ட்டிவ் ஸ்டீயரிங் வீல் , புதிய கமென்ட் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு மற்றும் ஏஎம்ஜி கிட்களை பெற்றுள்ளது.
முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் GLE 450 AMG காரின் போட்டியாளராக பிஎம்டபிள்யூ எக்ஸ்6 விளங்கும். விலை விபரங்கள் வரும் 12ந் தேதி தெரியவரும்.

