Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ சர்வதேச பைக்குகள் அறிமுகம் எப்பொழுது ?

by MR.Durai
1 October 2016, 4:03 pm
in Auto News
0
ShareTweetSend

உலகின் முதன்மையான மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளராக விளங்கும் ஹீரோ சர்வதேச அளவிலான முதல் பைக் மாடலை வருகின்ற 2017 ஜனவரி டாக்கர் ரேலி பந்தயத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

100சிசி  முதல் 125சிசி வரையிலான தொடக்க நிலை சந்தையில் மிகவும் வலுவான அடிதளத்தினை கொண்டுள்ள ஹீரோ பைக் நிறுவனம் 150சிசி முதல் 250சிசி வரையிலான பிரிமியம் மோட்டார்சைக்கிள் சந்தை மதிப்பு மிக குறைவாக உள்ளது.

ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிந்த பின்னர் இபிஆர் நிறுவனத்துடன் பல சிறப்பான மாடல்களை காட்சிப்படுத்திய ஹீரோ அவற்றை முழுமையாக விற்பனைக்கு கொண்டு வருவதற்குள் இபிஆர் நிறுவனம் நிதி நெருக்கடியில் திவாலானதால் ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் HX250 R, ஹேஸ்டர் போன்ற பைக்குகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

150சிசி பிரிவில்  பஜாஜ் பல்சர் 150 , யமஹா FZ வரிசை , அவென்ஜர் 150 போன்றவை முக்கிய பங்காற்றி வருகின்றது. 150சிசி முதல் 180சிசி வரையிலான பிரிவில் சிபி யூனிகார்ன் 160 , சிபி ஹார்னெட் 160ஆர் , சுசூகி ஜிக்ஸெர் , அப்பாச்சி 160 , அப்பாச்சி 180 போன்றவை முக்கிய பங்காற்றி வருகின்ற நிலையில் இவைகளுக்கு சவாலாக அமையும் வகையில் புதிய ஹீரோ அச்சீவர் 150 பைக் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சிறுத்தை புலி உந்துதலின் அடிப்படையில் உற்பத்தி நிலை ஹீரோ எக்ஸ்டீரிம் 200 எஸ் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. எக்ஸ்டீரிம் ஸ்போர்ட் மாடலை அடிப்படையாக கொண்ட 18.6 PS ஆற்றலை 8500 rpm மற்றும் 17.2 Nm டார்க்கினை 6000 rpm சுற்றில் வழங்கும் புதிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 200cc 4 ஸ்டோர்க் என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றிருக்கும். பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் , எல்இடி விளக்குகள் , ஏபிஎஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

 

200சிசி பிரிவில் டியூக் 200 , பல்சர் 200ஆர்எஸ் , பல்சர் 200என்எஸ் , கேடிஎம் ஆர்சி200 மற்றும் புதிதாக வந்துள்ள டிவிஎஸ் அப்பாச்சி 200 4V அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. இது போன்ற பைக்குகளுக்கு போட்டி போடும் வகையில் ஹீரோ மோட்டோகார்ப் வசம் எந்த பைக்கும் இதுவரை போட்டியிடும் திறன் இல்லாமல் உள்ளது.

100சிசி முதல் 125சிசி வரையிலான பிரிவில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ஹீரோ பைக்குகள் , 150சிசி பிரிவில் தற்பொழுது சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றது. 150சிசி க்கு மேற்பட்ட 250சிசி வரையிலான செயல்திறன் மிக்க பைக் பிரிவில் மோட்டார்சைக்கிளை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரிமியம் சந்தைக்கு ஏற்றவாறு 150சிசி முதல் 250சிசி வரையிலான சந்தையில் சிறப்பான செயல்திறன் மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலான பைக்குகளை அடுத்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க ; ஹீரோ எக்ஸ்டீரிம் 200 எஸ் பைக் விபரம்

ஹீரோ சிஐடி

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் ஹீரோ மத்திய புத்தாக்க மற்றும் தொழிநுட்ப மையத்தினை (Hero Centre of Innovation and Technology -CIT )ஹீரோ மோட்டோகார்ப் திறந்துள்ளது. இந்த மையத்தின் வாயிலாக பல சிறப்பான சோதனைகளை செய்யும் வகையில் உலகத்தரத்துக்கு இணையான கட்டமைப்பினை பெற்றுள்ளது.

247 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மையத்தில் 16 கிமீ நீளத்தில் அமைந்துள்ள சோதனை சாலை , இந்திய மற்றும் உலகத்தர சாலைகள் , 45 விதமான சாலை நிலைகளை கொண்டுள்ள இந்த மையத்தில் அனைத்து புதிய மாடல்களும் உருவாக்கப்பட உள்ளன. உலகத்தரத்தில் அமைந்துள்ள சிஐடி மையத்தில் புதிய டிசைன் , ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு , சோதனை போன்றவை செய்யப்படும். மிக வலுவான உள்கட்டமைப்பினை ஏற்படுத்தியுள்ள ஹீரோ மோட்டோகார்ப் எதிர்காலத்தில் போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் வகையில் தன்னை மேம்படுத்தி வருகின்றது.

புதிய டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள் ஹீரோ நிறுவனத்தின் என்ஜினை பெற்று சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் புதிய ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கிற்கு  ஹீரோ தயாரிப்பு  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 , அச்சீவர் 150 பைக்குகளை தொடர்ந்து பேசன் ப்ரோ மற்றும் சூப்பர் ஸ்பிளென்டர் போன்றவற்றில் ஐ3எஸ் நுட்பம் பெற்ற மாடலாக வரவுள்ளது.

15 பைக் மாடல்களை களமிறக்கும் ஹீரோ பைக்

முதற்கட்டமாக எக்ஸ்டீரிம் 200 எஸ் , ஹெச்எக்ஸ் 250 , ஹேஸ்டர் 620 மற்றும் எக்ஸ்எஃப்3ஆர் போன்ற மாடல்களை அடுத்த சில வருடங்களில் விற்பனைக்கு கொண்டு வரவும் சர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும் உற்பத்தி நிலை ஹீரோ HX 250 பைக்கும் உற்பத்தி நிலையை எட்டியுள்ளதால் 250சிசி பிரிவில் முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக சிறப்பான ஆற்றல் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

ஹீரோ சர்வதேச மாடல்

உற்பத்தி நிலையில் உள்ள மாடலாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் உள்ளதால் விற்பனைக்கு 2017 ஜனவரி டாக்கர் ரேலி பந்தயத்தில் அறிமுகம் செய்யப்படலாம் அல்லது புதிய 125சிசி இன்ஜினை பெற்ற கம்யூட்டர் பைக்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2017 டாக்கர் ரேலி பந்தயத்தில் முதன்முறையாக ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் பங்கேற்க உள்ளது.

Related Motor News

செப்டம்பரில் புதிய ஹீரோ கிளாமர் 125 க்ரூஸ் கண்ட்ரோலுடன் அறிமுகம்

அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பற்றி முக்கிய சிறப்புகள்

ஸ்போர்ட்டிவான ஹீரோ கரீஸ்மா XMR 250 அறிமுகமானது

ஸ்டைலிஷான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R அறிமுகமானது

சக்திவாய்ந்த அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக் வெளியானது..!

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

Tags: Hero Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ரூ.2.67 லட்சம் வரை சிட்ரோயன் கார்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan