ஃபேன்சி நம்பர் எனப்படும் 0001 முதல் 0009 வரையிலான எண்கள் மற்றும் 0786, 1111,2222, போன்ற எண்களுக்கு டெல்லியில் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் 0001 என்ற எண்ணுக்கு அதிகபட்சமாக ரூ. 16 லட்சத்துக்கு ஏலம் போகியுள்ளது.
ஃபேன்சி நம்பர்
சிறப்பு எண்கள் பெறுவதற்கு டெல்லி அரசு ஏல முறையை கடந்த 2014 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகின்றது. அவரவர் விருப்பத்துக்கேற்ப ஏலத்தில் விலை கொடுத்து வாங்கி இந்த எண்களை பெற முடியும். இந்த வரிசையில் சமீபத்தில் வந்த 0001 என்ற எண்ணுக்கு அதிகபட்சமாக ரூ.16 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்பாக 2014 ஆம் ஆண்டில் 0001 என்ற எண்ணுக்கு ரூ.12.50 லட்சம் மற்றும் கடந்த ஆண்டு 12.10 என ஏலத்துக்கு சென்றுள்ளது , இங்கே குறிப்பிடதக்கதாகும்.
- குறிப்பாக ஃபேன்சி எண்கள் என கருதப்படுகின்ற 0100, 0111, 0100, 0555, மேலும் ப போன்ற எண்களுக்கு ரூ. 1 லட்சம் ஆரம்ப ஏல தொகையாகும்.
- ரூ.2 லட்சம் விலையில் 0010 முதல் 0077, 0786, 1000, 1111, 6666 மற்றும் 9999 போன்ற எண்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
- 0002 முதல் 0009 வரை உள்ள எண்களின் ஆரம்ப ஏலதொகை ரூ.3 லட்சம் ஆகும்.
- மிகவும் போட்டியுள்ள 0001 என்ற எண்ணுக்கு ஆரம்ப ஏலதொகை ரூ.5 லட்சம் ஆகும்.
மேலும் படிங்க ; ஃபேன்சி எண்ணுக்கு சன்டை போட்ட தமிழக எம்எல்ஏ க்கள்
இந்த ஏலத்தில் தனிநபர்கள் மட்டுமல்ல நிறுவனங்களும் பங்கேற்பதாக டெல்லி ஆடிஓ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த ஆண்டில் 151 சிறப்பு பதிவெண்களை டெல்லி அரசு விற்பனை செய்து 2.29 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டில் இதுவரை 29 எண்களை விற்பனை செய்து ரூ.54.70 லட்சம் வரை பெற்றுள்ளது.
மேலும் வருகின்ற தீபாவளி பண்டிகை காலங்களில் வாகன விற்பனை அதிகரிக்கும் என்பதனால் ஃபேன்சி நம்பர் ஏலம் படு ஜோஆராக கலை கட்டும் என தெரிவிக்கப்படுகின்றது.