Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2.9 மில்லியன் டொயோட்டா கரோலா கார்கள் திரும்ப அழைப்பு

by automobiletamilan
ஏப்ரல் 3, 2017
in செய்திகள்

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளான டொயோட்டா மோட்டார் கார்பரேஷன் சர்வதேச அளவில் 2.9 மல்லியன் டொயோட்டா கரோலா கார்களில் ஏர்பேக் இன்ஃபிளேடர் பிரச்சனை காரணமாக திரும்ப அழைக்கின்றது.

டொயோட்டா கரோலா ஆல்டிஸ்

  • இந்தியாவில் 23,000 கரோலா ஆல்டிஸ் கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன.
  • உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான அம்மோனியா நைட்ரேட் இடம்பெற்றுள்ளது.
  • காற்றுப்பை டகாடா நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.

2010 முதல் 2012 வரை தயாரிக்கப்பட்ட கார்களில் இடம்பெற்றுள்ள இந்த பிரச்சனையால் ஜப்பான், சீனா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஓசியானா மேலும் சில பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள 2.9 மில்லியன் கரோல்லா கார்கள் திரும்பப்பெறப்படுகின்றன.

விற்பனை செய்யப்பட்டுள்ள கார்களில் அதிகபட்சமாக ஜப்பானில் 7.5 லட்சம், ஓசியானாவில் 1.16 லட்சம்,  இந்தியாவில் 23,000 ஆல்டிஸ் கார்கள் திரும்பப்பெறப்பட உள்ளது. டகாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஏர்பேக்குகளில் இடம்பெற்றுள்ள உலர்த்தும் கலவை திறன்  இல்லாத அம்மோனியா நைட்ரேட் உயிருக்க ஆபத்து விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதின் காரணமாக பாதுகாப்பு சார்ந்த அம்சத்தை கருத்தில் கொண்டு திரும்ப அழைக்கப்படுவதாக டொயோட்டா அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்தான அதிகார்வப்பூர்வ தகவலை டொயோட்டா தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட கரோல்லா கார்களுக்கு கட்டணமில்லாமல் மாற்றி தரப்பட உள்ளது.

சமீபத்தில் இந்திய சந்தையில் மேம்படுத்தபட்ட டொயோட்டா அல்டிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Tags: Toyotaகரோல்லா அல்டிஸ்
Previous Post

முட்டாள்கள் தினத்தை கொண்டாடிய மோட்டார் உலகம்

Next Post

புதிய 2017 மாருதி டிஸையர் காரின் படங்கள் வெளிவந்தது

Next Post

புதிய 2017 மாருதி டிஸையர் காரின் படங்கள் வெளிவந்தது

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version