Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாப் 5 சூப்பர் ஹிட் கார்கள் – 2015

by MR.Durai
28 December 2015, 8:54 am
in Auto News, Wired
0
ShareTweetSend

2015 ஆம் ஆண்டில் சந்தைக்கு வந்த புதிய கார்களில் சூப்பர் ஹிட் கொடுத்த டாப் 5 கார்கள் எவை ? சூப்பர் ஹிட் கார்கள் 2015 பட்டியல் டிசைன் , விற்பனை மற்றும் ஆட்டோமொபைல் தமிழன் வாசகர்களின் அதிகம் படித்த செய்திகள் போன்றவற்றினை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

5. ஃபோர்டு  ஃபிகோ

பதிய தலைமுறை ஃபிகோ மற்றும் புதிய ஃபிகோ ஆஸ்பயர் செடான் என இரண்டு கார்களுமே சிறப்பான வரவேற்பினை பெற்று 5வது இடத்தில் உள்ளது. மிக சிறப்பான விலையில் ஃபோர்டு தரத்துடன் அனைத்து வேரியண்டிலும் காற்றுப்பைகள் என பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை இருமாடல்களுமே பதிவு செய்து வருகின்றது.

4. மஹிந்திரா டியூவி300

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் காம்பேக் ரக பிரிவில் சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாகும். ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வந்த முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான டியுவி300 சந்தையில் முதன்மை வகித்து வந்த ஈக்கோஸ்போர்ட் மாடலை பின்னுக்கு தள்ளியுள்ளது. மஹிந்திரா எஸ்யூவி பாரம்பரியத்தினை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

3. மாருதி பலேனோ

பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி சுசூகி பலேனோ கார் நெக்ஸா டீலர் வழியாக விற்பனைக்கு வந்தது. அனைத்து வேரியண்டிலும் அடிப்படை பாதுகாபு அம்சங்களுடன் விளங்கும் பலேனோ கார் விற்பனைக்கு வந்த 4 வாரங்களிலே 40,000 முன்பதிவுகளை கடந்தது. மேலும் அறிமுகம் செய்த ஒரே மாதத்திலே மாத விற்பனையில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தது.

2. ஹூண்டாய் க்ரெட்டா

டஸ்ட்டர் முதல் எக்ஸ்யூவி500 வரை உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் மிகுந்த சவாலாக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவின் சிறந்த கார் 2016 விருதினை பெற்றுள்ளது. இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் ஆட்டோமேட்டிக் மாடலுடன் வந்த முதல் காம்பேக்ட் எஸ்யூவி மேலும் 1 லட்சம் முன்பதிவுகளை மிக விரைவாக நெருங்கி கொண்டிருக்கின்றது.

  1. ரெனோ க்விட்

பல ஆண்டுகளாக மூடிசூடா மன்னாக விளங்கி வந்த மாருதி ஆல்ட்டோ காருக்கு சவாலினை ஏற்படுத்தி 2015யில் இந்தியாவின் ஒட்டுமொத்த  ஆட்டோமொபைல் சந்தையை திரும்பி பார்க்க வைத்த கார் என்றால் அதில் ரெனோ க்விட் நிச்சியமாக முதலிடத்தினை பிடிக்கும்.  800சிசி என்ஜினுடன் சிறப்பான மைலேஜ் , எஸ்யூவி போன்ற வடிவமைப்பு , நவீன அம்சங்கள் என இவற்றை விட மிக சவாலான விலை என அனைத்திலும் ஒரு கிங்மேக்கராக க்விட் விளங்குகின்றது.

இதுபற்றிய உங்கள் கருத்து என்ன ? ரெனோ க்விட் காருக்கு முதலிடம் கொடுத்தது சரியா ? கமென்ட் பன்னுங்க , கமென்ட பன்னுவதற்கு பேஸ்புக் மற்றும் டிஸ்கஸ் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

Related Motor News

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

6 ஏர்பேக்குகளை பெற்ற 2025 மாருதி சுசூகி பிரெஸ்ஸா வெளியானது

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரோட்ஸ்டர் X+

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan