2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியா வருகை

0
புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்தியாவில் வரும் 2016ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் சோதனைகளுக்காக ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரை டொயோட்டா இறக்குமதி செய்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்

தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் 2.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் முற்றிலும் வடிவம் மற்றும் என்ஜின் என அனைத்திலும் புதிய மாற்றங்களை பெற்று நவீன அம்சங்களுடன் விளங்குகின்றது.

Google News

ஃபார்ச்சூனர் எஸ்யுவி காரின் முகப்பில் பை எல்இடி முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல் நேர எல்இடி விளக்குகள் நேர்த்தியான தோற்ற பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

டொயோட்டா ஃபார்ச்சூனர்

2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ள ஃபார்ச்சூனர் எஸ்ஊவி காரில் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்துள்ளது.
வரும் 2016ம் ஆண்டின் மத்தியில் புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்திய சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
All New Toyota Fortuner imported in India for R&D purpose