2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி ஜூலை 17 முதல்

தாய்லாந்தில் 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் வரும் 17ந் தேதி உலகின் பார்வைக்கு வரவுள்ளது. புதிய ஃபார்ச்சூனர் எஸ்யுவி முந்தைய மாடலை விட கம்பீரமான தோற்றம் மற்றும் நவீன வசதிகளை பெற்றிருக்கும்.

டொயோட்டா ஹைலக்ஸ்
டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப்

முற்றிலும் புதிய தோற்ற அமைப்பு , கம்பீரமான முகப்பு என பல அம்சங்களுடன் வரவுள்ள ஃபார்ச்சூனரில் டொயோட்டாவின் புதிய ஜிடி வரிசை என்ஜின் பயன்படுத்த உள்ளனர்.

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் டிரக்கின் பெரும்பாலான பாகங்களை ஃபார்ச்சூனர் பெற்றிருக்கும்.

இரண்டு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷனில் வரும். அவை புதிய 2.4 லிட்டர் ஜிடி மற்றும் 2.8 லிட்டர் ஜிடி என்ஜின் ஆகும்.  6 வேக மெனுவல் மற்றும் 6 வேக தானியங்கி என இரண்டு கியர்பாக்சிலும் வரலாம். மேலும் இரண்டு என்ஜின் ஆப்ஷனிலும் 4X2 டிரைவ் மற்றும் 4X4 டிரைவ் ஆப்ஷனில் வரலாம்.

மேலும் வாசிக்க ; டொயோட்டா ஜிடி என்ஜின் விபரம்

கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான் , தொடுதிரை அமைப்பு , ஏபிஎஸ் இபிடி , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , பக்கவாட்டு காற்றுப்பைகள் , வாகனம் உருளுவதனை தடுக்கும் அமைப்பு போன்ற அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக இருக்கும்.

இந்திய சந்தையின் பிரிமியம் எஸ்யுவி ராஜாவாக விளங்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி வரும் 2016ம் ஆண்டில் தொடக்கத்தில் வரவுள்ளது.

All-New Toyota Fortuner SUV unveiled on July 17, 2016