2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி அறிமுகம்

0

புத்தம் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி  அதிகார்வப்பூர்வமாக நாளை அறிமுகம் செய்ய உள்ளநிலையில் 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் அதிகார்வப்பூர்வ படங்கள் மற்றும் விவரங்கள் வெளிவந்துள்ளது.

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி  புதிய தோற்றத்தில் நேர்த்தியான வடிவம் மற்றும் கம்பீரத்துடன் சாலைகளில் வலம் வரவுரவுள்ளது.

Google News

டொயோட்டா ஹைலக்ஸ் பிக் அப் டிரக்கின் அடிப்படையாக கொண்ட  ஃபார்ச்சூனர் எஸ்யுவி  காரின் முகப்பில் பை எல்இடி முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல் நேர எல்இடி விளக்குகள் நேர்த்தியான இரண்டு குரோம் பட்டைகளுக்கு மத்தியில் டொயோட்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி

பனி விளக்கு அறைகள் பட்டையான வி தோற்ற வடிவம் என புதிய ஃபார்ச்சூனர் முகப்பில் கம்பீரமாக உள்ளது.

பக்கவாட்டில் சி பில்லரில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலிசான டிசைனிங் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது. வீல் ஆர்ச் , ஃபென்டர், ஃபூட் ஸ்டெப் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளன, 12 ஸ்போக் கொண்ட ஆலாய் வீல் சிறப்பாக உள்ளது.

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி
 ஃபார்ச்சூனர் எஸ்யுவி

பின்புறத்தில் மிக எடுப்பான குரோம் பட்டையில் ஃபார்ச்சூனர் பெயர் எழுதப்பட்டுள்ளது. எல்இடி டெயில் விளக்குகள் என ஓட்டுமொத்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பிரியர்களுக்கு மிக சிறப்பான தோற்றத்துடன் கவர்கின்றது.

உட்புறம்

முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலும் மாறுபட்ட டேஸ்போர்டு கரோல்லா அல்டிஸ் செடான் காரில் உள்ள டேஸ்போர்டு பாகங்களை பெற்றுள்ளது.

7 இருக்கைகள் கொண்ட ஃபார்ச்சூனரில் 4 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மொபைல் கட்டுப்பாடு பொத்தான்கள் , பூளூடூத் தொடர்பு  , லெதர் இருக்கைகள் , தொடுதிரை அமைப்பு என பல நவீன அம்சங்களை கொண்ட எஸ்யுவியாக ஃபார்ச்சூனர் மாறியுள்ளது.

2016 டொயோட்டா ஃபார்ச்சூனர்

என்ஜின்

148பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் ஜிடி டீசல் என்ஜின் மற்றும் 175பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்  2.8 லிட்டர் ஜிடி டீசல் என்ஜின் என இரண்டு என்ஜின் ஆப்ஷனுடன் மேலும் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக தானியங்கி கியர்பாக்சில் கிடைக்கும்.

2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டு ஆப்ஷனிலும் கிடைக்கும்.

2016 Toyota Fortuner specs

சிறப்பம்சங்கள்

7 காற்றுப்பைகள் , ரிவர்ஸ் கேமரா , கீலெஸ் என்ட்ரி , மலை ஏற இறங்க உதவி , ஏபிஎஸ் , இபிடி , முன் மற்றும் பின் பக்கங்களில் டிஸ்க் பிரேக் , பார்க்கிங் சென்சார் என பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

இந்தய சந்தையில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவி  காரின் போட்டியாளர்கள் எண்டெவர் , பஜெரோ ஸ்போர்ட் , சான்டா ஃபீ , ட்ரெயில் பிளேசர் ஆகும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா ஃபார்ச்சூனர்

 

All New Toyota Fortuner SUV revealed