2016 டொயோட்டா இன்னோவா டீசர் வெளியீடு

டொயோட்டா இன்னோவா காரின் இரண்டாம் தலைமுறை மாடல் வரும் 23ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. . 2016 டொயோட்டா இன்னோவா கார் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரவுள்ளது.

Toyota Innova front teaser released

டொயோட்டா இன்னோவா பிரவுச்சர்

இரண்டாம் தலைமுறை இன்னோவோ முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு சொகுசு கார்களுக்கு இணையான தோற்றத்துடன் பல நவீன வசதிகளை பெற்றுள்ளது. வரும் நவம்பர் 23ந் தேதி டொயோட்டா இன்னோவா அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இன்னோவா தோற்றம்

நவீன காலத்திற்க்கு ஏற்ற சிறப்பான விடவடிவமைப்புடன் காட்சியளிக்கும் டொயோட்டா இன்னோவா காரின் முகப்பில் அறுங்கோண வடிவ கிரிலில் இரண்டு அகலமான குரோம் பட்டைகளுக்கு மத்தியில் டொயோட்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா இன்னோவா பிரவுச்சர்
கரோல்லா அல்டிஸ் காரில் உள்ள டபுள் பேரல் புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள் , பகல்நேர எல்இடி ரன்னிங் விளக்குள் ,  கேம்ரி காரில் உள்ள பனி விளக்குகள்  போன்ற பனி விளக்கினை பெற்றுள்ளது. புதிய இன்னோவா காரின் ஒட்டுமொத்த முகப்பு தோற்றம் கரோல் அல்டிஸ் மற்றும் கேம்ரி கார்களுக்கு இணையான தோற்றத்தினை பெற்றுள்ளது.
பக்கவாட்டில் 16 இஞ்ச்  மற்றும் 17  இஞ்ச் அலாய் வீல் ஸ்டைலிசான பக்கவாட்டு புரஃபைலை பெற்றுள்ளது. மேலும் பின்புறத்தில் எல்இடி டெயில்விளக்குகள் உள்ளது. மொத்தம் 7 வண்ணங்களில் புதிய இன்னோவா கிடைக்கும்.

நீளம் ; 47345மிமீ
அகலம் ;1830மிமீ
உயரம் ; 1795 மிமீ
வீல்பேஸ் ; 2750மிமீ

உட்புறம்
புதிய ஃபார்ச்சூனர் காரின் இன்டிரியரை போலவே புதிய இன்னோவா காரின் இன்டிரியர் அமைந்துள்ளது. 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , பூளூடூத் யூஎஸ்பி , ஆக்ஸ் தொடர்புகள் , ஸ்மார்போன் தொடர்பு , குரல் வழி கட்டுப்பாடு , டில்ட் ஸ்டீயரிங் , கூல்டு க்ளோவ் பாக்ஸ் என பல நவீன வசதிகளை பெற்றுள்ளது. 
டொயோட்டா இன்னோவா பிரவுச்சர்

டொயோட்டா இன்னோவா என்ஜின்

இன்னோவா காரில் புதிய 2.4 லிட்டர் GD வரிசை டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய 2.5 லிட்டருக்கு மாற்றாக புதிய 2.4 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  149பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2.4 லிட்டர் என்ஜின் டார்க் 359என்எம் ஆகும். இதில் 6வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்துள்ளது. என்ஜினில் பவர் மற்றும் இக்கோ மோட் ஆப்ஷன் உள்ளது.
டொயோட்டா இன்னோவா பிரவுச்சர்
139 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சில நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் என்ஜின் வரவாய்ப்புகள் குறைவு.

இன்னோவா
சிறப்பம்சங்கள்

முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் , இபிடி மலையேற இறங்க உதவி போன்றவை அனைத்து வேரியண்டிலும் உள்ளது. டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகளை பெற்றுள்ளது.  கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் போன்றவற்றை கொண்டுள்ளது.
டொயோட்டா இன்னோவா பிரவுச்சர்
இந்தோனேசியா மாடலின் விவரங்களாக இருந்தாலும் இந்தியாவிலும் இதே மாடல்தான் சில மாற்றங்களுடன் வரவுள்ளது.
All New Toyota Innova Teaser